ஐபோன்களின் விலை அதிரடி குறைப்பு

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் விலையில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

மிகவும் எதிர் பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் X சீரியஸில் 3 போன்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு விலைக் குறைப்பினை ஆப்பிள் நிறுவனம் செய்துள்ளது. இந்த விலைக்குறைப்பு இந்திய சந்தையில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஐபோன்களின் விலை அதிரடி குறைப்பு

இதன்படி ஆப்பிள் ஐ ஃபோன் சீரிஸ் விலை ரூ. 29,900-லிருந்து ஆரம்பமாகிறது. பெரிய அளவிலான டிஸ்பிளேயை விரும்புபவர்களுக்காக ஐ போன் 6s Plus அமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை தற்போது ரூ. 34,900-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேலதிக விவரங்கள் அனைத்தும் ஆப்பிள் இணைய தளதில் வெளியிடப்பட்டுள்ளது. the iPhone SE, iPhone 6s, iPhone 6s Plus, and iPhone X ஆகியவற்றின் விலை அமெரிக்காவில் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் இந்தியாவில் iPhone SE ரக ஃபோன் மட்டுமே விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஐபோன்களின் விலை அதிரடி குறைப்பு

கடந்த ஆண்டு i iPhone X –ன் (64 ஜி.பி.) விலை ரூ. 91,900-ஆக குறைந்துள்ளது. 256 ஜி.பி. மாடல் ரூ. 1,06,900-க்கு விற்பனையாகிறது. முன்பு இதன் விலைகள் முறையே ரூ. 95,390-க்கும், ரூ. 1,08,930-க்கும் கடந்த ஆண்டு விற்பனையானது.