vivo iqoo 3

விவோ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் IQOO 3 மொபைலில் 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 4ஜி ஆதரவினை பெற்ற ஐக்யூ 3 மாடலின் 6ஜிபி ரேம் ஆரம்ப விலை ரூ.36,990 ஆகும். நேற்றைக்கு இந்தியாவில் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாக ரியல்மி எக்ஸ் 50 புரோ வெளியானது.

iQOO 3 (‘I Quest On and On’) ஸ்மார்ட்போனில் வெளியாகியுள்ள 5ஜி ஆதரவினை பெற்ற ஸ்னாப்டிராகன் 865 மொபைல் இயங்குதளத்தினை பெற்றதாக வந்துள்ள இந்த மாடலில்  6.44 அங்குல திரையை பெற்று முழு ஹெச்டி+ 1,080×2,480p தீர்மானத்தை பெற்றுள்ளது. இந்த மொபைலில் கேமிங் சார்ந்த தேவைகளுக்கு என பிரத்தியேகமான 4டி கேமிங் வைப்ரேஷன் பெற்ற ‘Monster Touch Buttons’ வழங்கப்பட்டுள்ளது.

சூப்பர் நைட் மோட் உட்பட பல்வேறு வசதிகளை கொண்ட குவாட் கேமரா பெற்ற ஐக்யூ 3 மாடலில் 48 மெகாபிக்சல் சோனியின்  IMX582 பிரைமரி கேமரா,  13 மெகாபிக்சல் டெலிபோட்டோ, 13 மெகாபிக்சல் வைட் ஏங்கிள் சென்சார் மற்றும் 2 எம்பி சென்சார் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் வசதிக்கு என பிரத்தியேகமான 16 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படுகின்ற விவோ ஐக்யூ 3 போனில்  4,400mAh பேட்டரியுடன் 55W ஃபாஸ்ட் சார்ஜரை கொண்டுள்ளது.

விவோ iQOO 3 விலை

iQOO 3 4G – ரூ. 36,990 ( 8GB RAM ,128GB ஸ்டோரேஜ்) 

iQOO 3 4G – ரூ.39,990 ( 8GB RAM ,256GB ஸ்டோரேஜ்) 

iQOO 3 5G – ரூ.44,900 (12GB RAM + 256GB ஸ்டோரேஜ்) 

இந்த மொபைல் போன் விற்பனை மார்ச் 4 ஆம் தேதி  12 மணிக்கு, ஃபிளிப்கார்ட் மற்றும் iQOO.com வழியாக ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும்.