வோடபோன் 4ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ.1590 மட்டுமே

ஐடெல் மொபைல் மற்றும் வோடபோன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ போனுக்கு எதிராக ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் ரூ. 1590 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

வோடபோன் 4ஜி ஸ்மார்ட்போன்

வோடபோன் 4ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ.1590 மட்டுமே

வோடபோன் டெலிகாம் நிறுவனம் ஐடெலுடன் இணைந்து புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஐடெல் A20 4G ஸ்மார்ட்போன் விலை ரூ.3690 ஆகும். இந்த மொபைலுக்கு ரூ.2100 கேஷ்பேக் கிடைப்பதனால் நிகர மதிப்பு ரூ.1590 ஆகும்.

இந்த வாய்ப்பை பெறுவதற்கு, ஐடெல் A20 ஸ்மார்ட்போன் ரூ.3690 விலையில் வாங்கும்போது, 18 மாதங்களுக்கு தொடர்ச்சியாக 150 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் 18 மாதங்களின் முடிவில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.900 கேஷ்பேக் கிடைக்கும். மேலும் மற்றொரு 18 மாதங்களுக்கு தொடர்ச்சியாக ரூ.150 க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலான கேஷ்பேக் ரூ.1200 கிடைக்கும். இந்த வாய்ப்பை மார்ச் 31, 2018 வரை மட்டுமே பயன்படுத்த முடியும். ரீசார்ஜ் முடிவில், வாடிக்கையாளர்கள் எம்-பைசா வாயிலாக கேஷ்பேக் பெறுவார்கள்.

அறிமுகத்தின் போது ஐடெல் மார்கெட்டிங் பிரிவு தலைவர் கூறுகையில்,  4ஜி ஸ்மார்ட்போன் அனுபவத்தை மக்களுக்கு அணுகுவதற்கும், எங்கள் தயாரிப்புகளின் மதிப்புக்கூற்றுகளை அதிகமாக வழங்கவும் நாங்கள் 4ஜி கருவியை முக்கியமான டைப்-அப்களில் நுழைந்து அதிக மதிப்பு வழங்குவதற்கு வோடபோனுடனான எங்கள் கூட்டு இந்த உறுதிப்பாட்டை வழியுறுத்துகிறது. வோடபோனின் உயர்ந்த நெட்வொர்க் கவரேஜ் சிறப்பு அம்சமான A20 மொபைல் போன் வாயிலாக முழுமையாக பூர்த்தி செய்கிறது.

நாட்டில் வோடபோன் வாடிக்கையாளர்களிடமிருந்தும் ஒட்டுமொத்த மதிப்பையும் அதிகரிப்பதன் மூலம் இந்த கூட்டணியின் வாயிலாக நாட்டிற்கு 4ஜி சார்ந்த சேவைகளை பூர்த்தி செய்யும் என நாங்கள் நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐடெல் A20 மொபைல் நுட்ப விபரங்கள்

ஐடெல் A20  போன் 4 அங்குல WVGA காட்சி கொண்டுள்ளது, மற்றும் 1ஜிபி ரேம் கொண்டு 1.3 GHZ  குவாட்கோர் SoC மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி  உள்ளீட்டு சேமிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐடெல் A20 கருவி 1500mAh பேட்டரி கொண்டு இயக்கப்பட்டு ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தில் கிடைக்கின்றது. கேமரா துறை பிரிவில் பின்புறத்தில் எல்இடி ப்ளாஷ் உடன் கூடிய 2 மெகாபிக்சல் சென்சார் கேமரா உள்ளது மற்றும் முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் , செல்பி படங்களை எதிர்கொள்ள VGA கேமரா வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here