itel ஏ46

ஐடெல் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர், பட்ஜெட் விலையில் டூயல் கேமரா வசதியுடன் கூடிய A46 ஸ்மார்ட்போனை ரூ.4,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஏ46 ஸ்மார்ட்போனில் குறிப்பிடதக்க அம்சமாக டூயல் கேமரா ஆப்ஷன் வழங்கப்பட்டு 2400 மில்லி ஆம்பியர் மூலம் இயக்கப்படுகின்றது.

ஐடெல் A46 சிறப்புகள்

குறைந்த விலையில் ஃபேஸ் அன்லாக், கைரேகை சென்சார் கொண்ட இந்த போனினை இயக்க 1.6GHz ஆக்டோ கோர் Unisoc SC9863 பிராசெஸருடன் கூடிய 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் மெமரி கொண்ட மாடலை வெளியிட்டுள்ளது. கூடுதலாக மெமரியை 128 ஜிபி வரை மைக்ரோஎஸ்டி அட்டை வாயிலாக விரிவுப்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு 9 (பை) இயங்குதளத்தை பின்பற்றி 5.45 அங்குல ஹெச்டி டிஸ்பிளே 1280×720 பிக்சல்ஸ் தீர்மானம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள A46 போனில் பிரைமரி ஆப்ஷனில் எல்இடி ஃபிளாஷ் பெற்ற 8 மெகாபிக்சல் கேமரா, விஜிஏ செகன்ட்ரி கேமரா மற்றும் செல்ஃபி, வீடியோ அழைப்புகளுக்கு என 5 மெகாபிக்சல் கேமரா பெற்றுள்ளது.

2400mAh பேட்டரி கொண்ட மைக்ரோமேக்ஸின் ஐஒன் போனில் 4ஜி எல்டிஇ, வை-ஃபை, ப்ளூடூத் 4.2 ஆப்ஷன் மற்றும் யூஎஸ்பி போர்ட் போன்றவை உள்ளது.

itel A46 specifications

  • 5.45 அங்குல HD+ (1280×720 pixels) TFT IPS டிஸ்பிளே
  • 1.6GHz ஆக்டோ கோர் Unisoc SC9863 பிராசெஸருடன் IMG8322 GPU
  • 2GB RAM, 16GB சேமிப்பு, 128GB உடன் microSD கார்டு
  • ஆண்ட்ராய்டு 9.0 (Pie)
  • இரட்டை சிம் (nano + nano / microSD)
  • 8MP ரியர் கேமரா எல்இடி ஃபிளாஷ், VGA செகன்ட்ரி கேமரா
  • 5MP முன்புற கேமரா
  • கைரேகை சென்சார்
  • டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடுத் 4.2, GPS + GLONASS, மைக்ரோ யூஎஸ்பி
  • 2400mAh பேட்டரி