சீனாவைச் சேர்ந்த ஐவூம்ஐ நிறுவனம் புதிதாக இரண்டு பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஐவூம்ஐ மீ 3 மற்றும் ஐவூம்ஐ மீ 3எஸ் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

பட்ஜெட் விலையில் ஐவூம்ஐ மீ 3 & மீ 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஐவூம்ஐ மீ 3 & மீ 3எஸ் ஸ்மார்ட்போன்

4ஜி வோல்ட்இ ஆதரவினை பெற்றதாக வந்துள்ள இரு மொபைல்களும் பட்ஜெட் விலையில் பல்வேறு அம்சங்களை பெற்றதாக வெளியிடப்பட்டுள்ளது.

இரு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்துடன் கூடிய இதில் 5.2 அங்குல டிஸ்பிளே ஷேட்டர்ப்ரூஃப் கொண்டதாக 720×1280 பிக்சல் தீர்மானத்துடன் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் கொண்டு செயல்படுத்தப்படுகின்ற ஸ்மார்ட்போனில் 3000 mAh பேட்டரி பெற்றதாக உள்ளது.

இரு மாடல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் ஐவூம்ஐ மீ 3 மொபைல்  2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை பெற்று இருபுறங்களிலும் 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் ஐவூம்ஐ மீ 3 & மீ 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஐவூம்ஐ மீ 3எஸ் மொபைல் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை பெற்று பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் செல்பி 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இரு மொபைல்களிலும் ப்ளூடூத் 4.2, வை-ஃபை 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.

பட்ஜெட் விலையில் ஐவூம்ஐ மீ 3 & மீ 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஐவூம்ஐ மீ 3 விலை – ரூ.5,499

ஐவூம்ஐ மீ 3எஸ் விலை – ரூ.6,499

பட்ஜெட் விலையில் ஐவூம்ஐ மீ 3 & மீ 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here