ரூ. 4,999 ரூபாய் விலையில் அறிமுகமானது ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மோனோ ஹெட்செட்

ஜாப்ரா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மூலம் இயங்கும் ஹெட்செட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹெட்செட்களை 4 ஆயிரத்து 999 ரூபாய் விலையில் வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டிவைஸ், நாய்ஸ் கேன்சல் செய்யும் வசதியுடன் ஆறு மணி நேரம் வரை பயனபடுத்தும் வகையில் இருக்கும் என்றும் கால் மட்டும் பேசினால் 8 நாள் வரை சார்ஜ் உடன் இருக்கும் என்றும் ஆடியோக்களை ஸ்டிரிமிங் செய்யும் திறனுடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இரண்டு மைக்ரோபோன் தொழில்நுட்பநக்கலுடன் HD வாய்ஸ்களைஆட்டோமேடிக்காக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதியுடனும். தேவையற்றை சத்தங்களை ரத்து செய்து கொள்ளும் திறனுடம் வெளியாகியுள்ளது. இதில் உள்ள நவீன வாய்ஸ் கேன்சல் செய்யும் வசதி மூலம் தேவையற்ற சத்தங்களை தடுப்பதுடன், இடையுறு இல்லாத மியூசிக்/வாய்ஸ்களை தெளிவாக கேட்க முடியும்.

ரூ. 4,999 ரூபாய் விலையில் அறிமுகமானது ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மோனோ ஹெட்செட்

ஆறு மணி நேரம் வரை பாடல்களை கேட்கவும், கால் மட்டுமே பேசினால் 8 நாட்கள் வரையில் இந்த ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மோனோ ஹெட்செட் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இதில் வசதியாக ப்ளூடூத் வழியாக வயர்லெஸ் முறையியல் போன் அழைப்புகளை செய்து கொள்ள முடியும்.

டாக் 45 ஹெட்போன்களை பயன்படுத்தி உங்கள் மொபைல் போன்களில் உள்ள வயர்லெஸ் ஸ்டீரிமிங் ஜிபிஎஸ், மியூசிக், வீடியோ போன்றவற்றை கேட்க முடியும். சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த இயர்போன்கள் உங்கள் காதுகளில் சரியாக பொருத்தும். மேலும், எந்தவித இடையூறுமின்றி ஆடியோக்களை கேட்கும் அனுபவத்தை அளிக்கும்.

ரூ. 4,999 ரூபாய் விலையில் அறிமுகமானது ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மோனோ ஹெட்செட்

இந்த ஹெட்போன் குறித்து பேசிய நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பீட்டர் ஜெயசீலன், ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மோனோ ஹெட்செட் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் புதிய இசை அனுபவத்தை முழுமையாக பெற முடியும் என்றார்.
ஜாப்ரா டாக் 45 ஹெட்போன்களை, Amazon, Croma மற்றும் ஜாப்ரா நிறுவன அதிகாரப்பூர்வ ரீடெயிலர்களில் வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.