உலகின் மிகச்சிறிய ஜெல்லி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில் செயல்படுவதுடன் 2.4 அங்குல டிஸ்பிளே பெற்றிருப்பதுடன் 4ஜி ஆதரவினை பெற்றுள்ளது.

உலகின் மிகச்சிறிய 4G ஸ்மார்ட்போன் ஜெல்லி அறிமுகம்

ஜெல்லி ஸ்மார்ட்போன்

  • ஆண்டராய்டு  7.0 நௌகட் இயங்குதளத்தில் செயல்படுகின்றது.
  • 2.4 அங்குல டிஸ்பிளே பெற்று 8 MP கேமரா வசதியை பெற்று விளங்குகின்றது.
  • இரு சிம் கார்டு வசதியுடன் 1GB மற்றும் 2GB ரேம் தேர்வுகளில் கிடைக்க உள்ளது.

சீனா சாங்காய் பகுதியைச் சேர்ந்த யூனிஹெர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக அமைந்துள்ள ஜெல்லி 4ஜி ஸ்மார்ட்போன்களை தயாரிக்க $ 80,000 முதலீட்டை அறிவித்துள்ளது இந்த நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

உலகின் மிகச்சிறிய 4G ஸ்மார்ட்போன் ஜெல்லி அறிமுகம்

ஜெல்லி மொபைல்  2.45 இன்ச் 240×432 பிக்சல் தீர்மானத்துடன் கூடிய டிஎஃப்டி எல்சிடி டிஸ்பிளே பெற்று 201ppi பிக்சல் அடர்த்தியை பெற்றுள்ளது. இதில் 1.1GHz குவாட் கோர் பிராசஸருடன் 1 ஜிபி ரேம் மாடலில் 8ஜிபி உள்ளடங்கிய மெமரி மற்றும் 2 ஜிபி ரேம் மாடலில் 16 ஜிபி உள்ளடங்கிய மெமரி என இரு வகையான மாடல்களில் கிடைக்க உள்ளது. மேலும் கூடுதலாக மெமரியை அதிகரிக்க 32ஜிபி வரை மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.

கேமரா வகையில் பிரைமரி ஆப்ஷனாக 8 எம்பி மற்றும் முன்புறத்தில் 2 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஜெல்லி ஸ்மார்ட்போனில் 950mAh பேட்டரி பெற்று சிறப்பான திறனை மூன்று நாட்களுக்கு வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விருப்பங்களாக ஜிபிஎஸ் , புளூடூத் v4.0, மற்றும் வை-பை 802.11 a/b/g/n. இந்த மொபைலின் அளவுகள் விபரம் 92.3x43x13.3mm.

முழுநுட்ப விபரத்தை படத்தில் காணலாம்

உலகின் மிகச்சிறிய 4G ஸ்மார்ட்போன் ஜெல்லி அறிமுகம்

ஜெல்லி ஸ்மார்ட்போன் விலை
  • ஜெல்லி – $59 (Rs. 3,800)
  • ஜெல்லி ப்ரோ -$75 (Rs. 4,800)

இந்த மொபைல் பற்றி உங்கள் கருத்தை மறக்காம பதிவு பன்னுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here