குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் தயாரிக்க கூகுள் மற்றும் ஜியோ கூட்டணி

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனமும் இணைந்து மிகவும் குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு ஓ.எஸ் அடிப்படையாக கொண்ட 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்க உள்ளதாக ரிலையன்ஸ் 43வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ஜியோ பிளாட்ஃபாரம் மூலம் கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடியை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் ஜியோ நிறுவனத்தின் 7.8 சதவீத பங்குகளை கூகுள் பெற்றுள்ளது. இதுவரை ஜியோ நிறுவனத்தின் 33 சதவீத பங்குகளை ஃபேஸ்புக், கூகுள், இன்டெல், குவால்காம் என 14 நிறுவனங்கள் கையகப்படுத்தியுள்ளது.

ஜியோ மற்றும் கூகுள் இணைந்து குறைவான விலை ஸ்மார்ட்போன் மாடலை தயாரிப்பதனை நோக்கமாக கொண்டுள்ளது. குறிப்பாக முன்பே கூகுள் தனது ஆண்ட்ராய்டு கோ இயங்குதளம் மூலம் குறைவான ரேம் மற்றும் சேமிப்பை கொண்டு விரைவாக செயல்படும் வகையிலான பல்வேறு விதமான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் விற்பனை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றது.

இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க உள்ள குறைந்த விலை ஸ்மார்ட்போன் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டிலும் இயங்கும் வகையிலும், அதே நேரத்தில் லட்சகணக்கானோர் வாங்கும் வகையில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக அமைந்திருக்கும். மேலும் சிறப்பான மற்றும் இலகுவாக இயக்கும் வகையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் தயாரிக்க கூகுள் மற்றும் ஜியோ கூட்டணி

ஜியோ நிறுவனம் முன்பாக விற்பனை செய்து வருகின்ற 4ஜி ஆதரவை பெற்ற ஜியோபோன் விற்பனை எண்ணிக்கை 100 மில்லியனை கடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.