jio

புதிதாக மற்றொரு வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை ரூ.4,999 கட்டணத்தில் ரிலையன்ஸ் ஜியோ செயற்படுத்தியுள்ளது. முன்பாக உள்ள ரூ.2121 பிளான் 336 நாட்களுக்கு செயற்படுத்தபட்டு வரும் நிலையில் அதனை விட கூடுதலான வேலிடிட்டி வழங்குகின்றது.

ஜியோ நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள வருடாந்திர பிளானில் 360 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றது. குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள் கிடைக்கின்றது.

ரூ.4,999 பிளான் 360 நாட்களுக்கு

டேட்டா – 350 ஜிபி

வரம்பற்ற அழைப்புகள் – ஜியோ டூ ஜியோ இலவசம்,

மற்ற நெட்வொர்க் – 12,000 நிமிடங்கள் அதன் பிறகு நிமிடத்திற்கு 6 பைசா

தினமும் 100 எஸ்எம்எஸ்

வேலிடிட்டி  360 நாட்கள்

ஆனால் ரூ.2121 தினசரி 1.5 ஜிபி வழங்கப்பட்டு வேலிடிட்டி 346 நாட்கள் கிடைக்கும் நிலையில் மொத்தமாக 504 ஜிபி டேட்டா கிடைக்கின்றது. இந்த திட்டத்திலும் வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க்கிற்கு12,000 நிமிடங்கள் அதன் பிறகு நிமிடத்திற்கு 6 பைசா என வழங்கபட உள்ளது.