ரூ.2299 விலையில் சியோமி ரெட்மி கோ மொபைல், ஜியோ ஆஃபருடன் விற்பனைக்கு கிடைக்கும்

ரூ.4,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி ரெட்மி கோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2200 கேஷ்பேக் மற்றும் 100 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தில் செயல்படுகின்ற சியோமி ரெட்மி கோ ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்புகளுடன் மார்ச் 22, 2019 இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்நிலையில் ஜியோ சிறப்பு ஆஃபரை அறிவித்துள்ளது.

ஜியோ ரெட்மி கோ ஆஃபர் முழுவிபரம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் வழங்குநர்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்தியாவின் முதன்மையான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி நிறுவனத்துடன் இணைந்த சிறப்பு கேஸ்பேக் மற்றும் டேட்டா சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது.

ரெட்மி கோ ஸ்மார்ட்போன் வாங்கும் பயனாளர்கள் ஜியோ சிம் கார்டினை கொண்டு இந்த மொபைலை பயன்படுத்தினால், அதிகபட்சமாக ரூபாய் 2200 வரை கேஷ்பேக் சலுகையை பெறலாம்.

ரூ.2299 விலையில் சியோமி ரெட்மி கோ மொபைல், ஜியோ ஆஃபருடன் விற்பனைக்கு கிடைக்கும்
Xiaomi Redmi Go Price In India

ரூபாய் 198 மற்றும் ரூபாய் 299 ஆகிய இரு திட்டங்களை கொண்டு ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஒவ்வொரு ரீசார்ஜ் சமயத்திலும் ரூ.50 உடனடி கேஷ்பேக் கிடைக்கும் . இதன் காரணமாக ரூ.198க்கு பதில் ரூ.148க்கு ரீசார்ஜ் செய்தால் போதும், அடுத்த ரூ.299 திட்டத்தில் ரூ.249 மட்டும் செலுத்தினால் போதுமானதாகும்.

இவ்வாறு 44 முறை நீங்கள் ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம். இதன் காரணமாக ரூ.2200 வரை கேஷ்பேக்கை பெறலாம்.

 

100 ஜிபி இலவச டேட்டா

முதல் 10 முறைக்கு பொதுவாக வழங்கப்படுகின்ற டேட்டாவை விட கூடுலாக 10 ஜிபி டேட்டா என மொத்தமாக 100 ஜிபி டேட்டா வழங்கப்பட உள்ளது.

 

ரூ.2299 விலையில் சியோமி ரெட்மி கோ மொபைல், ஜியோ ஆஃபருடன் விற்பனைக்கு கிடைக்கும்

 

Xiaomi Redmi Go specifications

 • 5-inch (1280 x 720pixels) HD 16:9 ஆஸ்பெக்ட் விகிதம்
 • 1.4GHz Quad-Core ஸ்னாப்டிராகன் 425 உடன் Adreno 308 GPU
 • 1GB RAM, 8GB சேமிப்பு வசதி,
 • 128GB மைக்ரோ எஸ்டி அட்டை
 • ஆண்ட்ராய்டு 8.1 (Oreo Go Edition)
 • இரு சிம்
 • 8MP கேமரா LED Flash, f/2.0 aperture, 1.12μm pixel size
 • 5MP கேமரா f/2.2 aperture, 1.12μm pixel size
 • 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
 • அளவுகள்:140.4x 70.1 x 8.35mm; எடை: 137g
 • 4G வோல்ட்இ, ஒய்-ஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ்
 • 3000mAh பேட்டரி

xiaomi redmi go