உலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்

ஃபீச்சர் ரக மொபைல் சந்தையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனத்தின், 4ஜி ஜியோபோன் சர்வதேச ஃபீச்சர் ரக போன் விற்பனையில் முதலிடத்தை பெற்று விளங்குவதாக கவுன்டர்பாயிட் மொபைல் விற்பனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

ஜியோபோன்

சர்வதேச அளவில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா பிராண்டு பல்வேறு நாடுகளில் ஃபீச்சர் ரக மொபைல் போன் விற்பனையில் முதலிடத்தை பெற்றுள்ள நிலையில், ஜியோ நிறுவனத்தின் 4ஜி ஆதரவை பெற்ற ஜியோபோன் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சர்வதேச அளவில் முதலிடத்தை ஜியோஃபோன் பெற்று அசத்தியுள்ளது.

ஃபீச்சர் ரக மொபைல் விற்பனையில் சீனாவின் ஐடெல் மூன்றாவது இடத்தில், சாம்சங் மற்றும் டெக்னோ ஆகிய நிறுவனங்கள் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளது குறிப்பிடதக்கதாகும்.

குறிப்பாக மாடல் வாரியான விற்பனையில் இந்த வருடத்தின் முதல் மூன்று மாத விற்பனையில் சர்வதேச அளவில் ஜியோபோன் 15 சதவீதம், நோக்கியா 105 மொபைல் 7 சதவீதம் பெற்றுள்ள நிலையில் இதனை தொடர்ந்து ஐடெல் நிறுவனத்தின் itel IT2180, itel IT2130 மற்றும் itel IT5231 ஆகிய மொபைல்கள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் சிறப்பான வளர்ச்சி பெற்று விளங்குகின்றது குறிப்பிதக்கதாகும்.

ஹெச்எம்டி குளோபல் சார்பில் வெளியான 4ஜி ஆதரவை பெற்ற நோக்கியா 3310 , நோக்கியா 8110 ஆகிய மொபைல்கள் சந்தைக்கும் வரும்பட்சத்தில் நோக்கிய சந்தை மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended For You