ஜியோபோனை வீழ்த்துமா..! பிஎஸ்என்எல் பாரத் 1 போன் - ஒப்பீடுரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் மாடலுக்கு எதிராக சவாலை ஏற்படுத்தும் வகையில் மைக்ரோமேக்ஸ் -பிஎஸ்என்எல் இணைந்து பாரத் 1 போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு மாடல்களையும் ஒப்பீட்டு இதன் விபரங்கள் மற்றும் முக்கிய அம்சங்களை அறிந்து கொள்ளலாம்.

ஜியோபோன் Vs பாரத் 1

ஜியோபோனை வீழ்த்துமா..! பிஎஸ்என்எல் பாரத் 1 போன் - ஒப்பீடு

இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை இணைக்கவும் மிகவும் அதிரடியான திட்டங்களை செயற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பாளரான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி வோல்ட்இ ஆதரவை பெற்ற பாரத்-1 பீச்சர் ரக மொபைல் போனை ரூ.2,200 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

டிஸ்பிளே

இரண்டு மொபைல் போன் மாடல்களும் 2.4 அங்குல QVGA திரையுடன் ஃபீச்சர் ரக பட்டன் போன் கொண்டுள்ள நிலையில் 22 மொழி ஆதரவுகளை பெற்றுள்ளது.

பிராசெஸர் & ரேம்

இரண்டு மொபைல் போன்களும் 512 எம்பி ரேம் கொண்டு இயக்கப்பட்டு 4ஜிபி ரோம் பெற்றதாகவும் கூடுதலாக சேமிப்பை விரிவுப்படுத்த மைக்ரோ எஸ்டி அட்டைக்கான ஸ்லாட் கொண்டதாக வந்துள்ளது.

ஜியோபோனை வீழ்த்துமா..! பிஎஸ்என்எல் பாரத் 1 போன் - ஒப்பீடு

கேமரா துறை

குறைந்தபட்ச கேமரா அம்சத்தை பெற்ற இரண்டு போன்களும் 2 மெகாபிக்சல் சென்சார் பெற்றதாகவும், முன்புறத்தில் VGA  கேமரா பெற்றதாக வந்துள்ளது.

பேட்டரி

நாள் முழுமைக்கும் மிக சிறப்பான வகையில் செயல்படும் வகையில் இரண்டு போன்களும் 2000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்று.

செயலிகள்

கெய் ஓஎஸ் கொண்டு இயக்கப்படுகின்ற ஜியோபோனில் மைஜியோ, ஜியோ ஆப்ஸ்கள் உட்பட பல்வேறு செயலிகள் அடிப்படை அம்சமாக இணைக்கப்பட்டிருப்பதுடன், ஜியோ கேபிள் வாயிலாக டிவியை இணைக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் பாரத்-1 போனில் இணையம், பீம் செயலி, நேரலையில் தொலைக்காட்சி சேவைகளை (Zenga TV) பெறும் வகையிலான வசதியை பாரத் ஒன் பெற்றுள்ளது.

ஜியோபோனை வீழ்த்துமா..! பிஎஸ்என்எல் பாரத் 1 போன் - ஒப்பீடு

கட்டுப்பாடு

ஜியோபோனில் ஒற்றை சிம் கார்டுடன்,ஜியோ சிம் மற்றும் ஜியோ சேவைகள் மட்டுமே பயன்படுத்த இயலும். ஆனால் மைக்ரோமேக்ஸ் போனில் இரட்டை சிம் கார்டு ஆதரவு 2ஜி/3ஜி/4ஜி ஆகிய சேவைகளை பயன்படுத்துவதுடன் எந்த நெட்வொர்க்கினையும் தேர்ந்தெடுக்கலாம்.

விலை

ஜியோபோன் நிகர மதிப்பு அடிப்படையில் இலவசம் அதாவது ரூ.1500 கட்டணத்தில் ரூ.153 டேட்டா பிளானில் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் ரூ.1500 திரும்ப பெற மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

மைக்ரோமேக்ஸ் – பி.எஸ்.என்.எல் பாரத்-1 போன் விலை ரூ.2,200 மட்டுமே, முழுமையாக மொபைல் போன் உங்கள் வசம் வழங்கப்பட்டிருக்கும், உங்கள் விருப்பம் போல பயன்படுத்தலாம்.

ஜியோபோனை வீழ்த்துமா..! பிஎஸ்என்எல் பாரத் 1 போன் - ஒப்பீடு

ஜியோபோன் Vs பிஎஸ்என்எல் போன் டேட்டா பிளான்

ரூ.153 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், தினசரி பயன்பாட்டிக்கு 512 எம்பி டேட்டா வழங்கப்படுவதுடன் மேலும் 64kbps வேகத்தில் வரம்பற்ற டேட்டா பெறலாம்.

மிகவும் சவாலாக மாதந்தோறும் ரூ.100 க்கு குறைவாக அதாவது ரூ.97 பிளான் கொண்டு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், மாதந்திர பயன்பாட்டிற்கு 5ஜிபி டேட்டா மற்றும் 80kbps வேகத்தில் வரம்பற்ற டேட்டா பெறலாம்.

ஜியோபோனை வீழ்த்துமா..! பிஎஸ்என்எல் பாரத் 1 போன் - ஒப்பீடு

கேட்ஜெட்ஸ் தமிழன் தீர்ப்பு

ஜியோபோனை போல குறிப்பிட்ட வசதிகள், ஒற்றை சிம் ,ஜியோ 4ஜி சேவைகள் என வரையறுக்கப்பட்ட சேவையை மட்டும் பயன்படுத்தாமல், எந்த டெலிகாம் நிறுவனத்தின் சேவைகளையும் பெறும் வகையில் 4ஜி ஆதரவு பெற்ற சிம் கார்டுகள், 3ஜி மற்றும் 2ஜி ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

மேலும், சமீபத்தில் ஜியோ நிறுவனம் டேட்டா கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், மேலும் கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஜியோஃபோனை தவிர்ப்பது மிகவும் நல்லதாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here