ரூ.6,790-க்கு கார்பன் ஃபிரேம்ஸ் S9 டூயல் செல்பி கேமராவுடன் அறிமுகம்

கார்பன் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனம், ரூ.6,790 பட்ஜெட் விலையில் கார்பன் ஃபிரேம்ஸ் S9 ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் இரட்டை கேமரா (Twinfie) வழங்கப்பட்டு 2ஜிபி ரேம் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கார்பன் ஃபிரேம்ஸ் S9

 

இந்தியாவில் பட்ஜெட் ரக மொபைல் போன் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், கார்பன் இரட்டை செல்பி கேமரா வசதியை பெற்றதாக உள்ள அம்சத்தை ட்வின்ஃபை என கார்பன் அழைக்கின்றது.

ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள கார்பன் ஃபிரேம்ஸ் எஸ்9 மொபைல் போன்  5.2-inch (720×1280) HD IPS திரையை பெற்று பெயர் குறிப்பிடப்படாத 1.2 ஜிகாஹெர்ட்ஸ் உடன் 2ஜிபி ரேம் பெற்று 16ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டதாக வந்துள்ளது.

பின்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா கொண்டு எல்இடி ஃபிளாஷ் . ஆட்டோ ஃபோகஸ் ஆகியவற்றுடன் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் போக்கோ மோட், சாஃப்ட் ட்வீன் ஃபை, குரூப் ட்வீன்ஃபை, வாட்டர்மார்க் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற்ற இரட்டை 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.

2900mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற ஃபிரேம்ஸ் எஸ்9 மொபைல் போன் இரட்டை சிம் கார்டு விரிவுப்படுத்தகூடிய 64ஜிபி எஸ்டி கார்டு, 4ஜி, வோல்ட்இ, வை-ஃபை, ப்ளூடுத் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை இணைப்பாக பெற்று விளங்குகின்றது.

ஃபிளிப்கார்ட், அமேசான், உள்ளிட்ட முன்னணி ஆன்லைன் மற்றும் ரீடெயலர்களிடம் ரூ.6790 விலையில் கார்பன் பிரேம்ஸ் எஸ்9 மொபைல்  கருப்பு, கேம்பெகைன் மற்றும் கிரே நிறங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது.

சிறப்பு சலுகை

ஏர்டெல் நிறுவனம், இந்த மொபைல் போனுக்கு சிறப்பு கேஸ்பேக் சலுகையாக ரூ. 2000 வரை அதிகபட்சமாக வழங்குகின்றது. ரூ. 500 கேஸ்பேக் சலுகையை முதல் 18 மாதங்களுக்கு பிறகு வழங்குவதுடன், அடுத்த 18 மாதங்களுக்கு பிறகு ரூ. 1500 என மொத்தமாக ரூ.2000 கேஷ்பேக் வழங்குகின்றது.

இந்த மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு என ரூ.169 கட்டணத்திலான திட்டத்தை தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை 28 நாட்களுக்கு வழங்குகின்றது.

 

Comments are closed.