Karbonn KX series feature phones

கார்பன் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் கேஎக்ஸ் வரிசை ஃபீச்சர் ரக மொபைல் போன் ரூபாய் 700 முதல் தொடங்குகின்றது. கார்பன் KX3, KX25, KX26 மற்றும் KX27 என மொத்தம் நான்கு மொபைல்கள் விற்பனைக்கு ஆஃப்லைன் மூலம் கிடைக்க உள்ளது.

இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஃபீச்சர் போன் தயாரிப்பாளரான கார்பனின் புதிய மொபைல்கள் மிக சிறப்பான பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. குறிப்பாக Ztalk எனப்படும் இன் பில்ட் மெசிங் ஆப் KX27 மாடலில் வழங்கப்பட்டுள்ளது. இந்த மெசிங் ஆப் வாட்ஸ்ஆப் போல டெக்ஸ்ட், வாய்ஸ் செய்திகள், படங்கள், எமோஜி, வணிக அட்டைகள் மற்றும் பலவற்றை அனுப்பும் திறனை பெற்றுள்ளது. மேலும் இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் கொண்டுள்ள பயனாளர்களுடன் இலகுவாக இந்த ஃபீச்சர் போன் மூலம் தொடர்பு கொள்ள இயலும்.

2.4 அங்குல டிஸ்பிளே பெற்ற கார்பன் கேஎக்ஸ் 27 போனில் 1750mAh பேட்டரியுடன் ப்ளூடூத், டிஜிட்டல் கேமரா, வீடியோ மற்றும் மியூசிக் பிளேயர், பூம் பாக்ஸ் ஸ்பீக்கர், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ மற்றும் பவர் சேவிங் மோட் பெற்றுள்ளது.

2.4 அங்குல டிஸ்பிளே பெற்ற கார்பன் கேஎக்ஸ் 26 போனில் ப்ளூடூத், டிஜிட்டல் கேமரா, வீடியோ மற்றும் மியூசிக் பிளேயர், பூம் பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் பவர் சேவிங் மோட் ஆகியவற்றுடன் 1450mAh பேட்டரி பெற்றுள்ளது.

2.4 அங்குல டிஸ்பிளே பெற்ற கார்பன் கேஎக்ஸ் 25 போனில் 1800mAh பேட்டரியுடன் ப்ளூடூத், டிஜிட்டல் கேமரா, டூயல் சிம் கார்டு ஸ்லாட், எஃப்எம் ரேடியோ மற்றும் பவர் சேவிங் மோட் பெற்றுள்ளது.

1.77 அங்குல டிஸ்பிளே பெற்ற கார்பன் கேஎக்ஸ் 3 போனில் 800mAh பேட்டரியுடன் வந்துள்ளது.

விலை மற்றும் கிடைக்குமிடம்

கார்பன் கேஎக்ஸ் 3, கேஎக்ஸ் 25, கேஎக்ஸ் 26 மற்றும் கேஎக்ஸ் 27 விலை ரூ. 700 முதல் ரூ. 1000 மற்றும் விரைவில் சந்தையில் வாங்க கிடைக்கும்.