21 மெகாபிக்சல் கேமரா பெற்ற பிரத்தியேகமான கோடாக் எக்ட்ரா கேமரா ஸ்மார்ட்போன் ரூ. 19,990 விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பிரத்தியேக கோடாக் எக்ட்ரா கேமரா மொபைல் அறிமுகம்!

கோடாக் எக்ட்ரா

உயர்தர டிஎஸ்எல்ஆர் கேமரா படங்களுக்கு இணையான புகைப்படங்களை பெறும் வகையில் கேமராவுக்கு என பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட் தளத்தில் நாளை மாலை 4 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

பிரத்தியேக கோடாக் எக்ட்ரா கேமரா மொபைல் அறிமுகம்!

டிஸைன் & டிஸ்பிளே

5.0 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே பெற்று 441ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1080×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக வந்துள்ளது. ஸ்மார்ட்போனில் பின்புறத்தின் மிக அகலமான பெரிய கேமரா வழங்கப்பட்டுள்ளது.

 

பிராசஸர் & ரேம்

கோடாக் எக்ட்ரா ஸ்மார்ட்போனில் 2.3GHz டெகா கோர் ஹெலியோ X20 ப்ராசசர் மூலம் 3 ஜி.பி ரேம் கொண்டு 32ஜிபி உள்ளடங்கிய மெமரி பெற்று இயக்கப்படுகின்றது.

கேமரா

கேமரா துறைக்கு என மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ள கேமரா ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள 21 மெகாபிக்சல் கேமரா வாயிலாக இரவு மற்றும் பகல் என எந்த நேரத்திலும், குறைந்த வெளிச்சம் உள்ள சூழ்நிலையிலும் மிக தெளிவான படங்களை பெறலாம்.

ARCSOFT நைட் விஷன்  நுட்பத்தின் மூலம் மிக தெளிவான படங்களை பெற உதவுவதுடன் OIS, PDAF, f/2.0,  4K விடியோ பதிவு செய்யும் வசதிகளை பின்புற கேமரா கொண்டுள்ளது. இதுதவிர வீடியோ மற்றும் படங்களை எடிட் செய்து உயர்ரகத்தில் பெற வழிவகுக்கும் ஸ்னாப்ஸ்பீடு ஆப் வழங்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 13 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பபட்ட்டுள்ளது.

பிரத்தியேக கோடாக் எக்ட்ரா கேமரா மொபைல் அறிமுகம்!

பேட்டரி

ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லா இயங்குதளத்தை பெற்ற இந்த மொபைலில் திறன் மிகுந்த 3000mAh பேட்டரி பெற்றுள்ளது.

மற்றவை

Wi-Fi, ஜிபிஎஸ், ப்ளூடூத் ஆகியவை வழங்குகிறது. இதில் 147.80×73.35×9.69m அளவுகளை கொண்டுள்ளது.

விலை

ரூ.19,990 விலையில் கேமராவுக்கு என சிறப்பாக வழங்கப்பட்டுள்ள எக்ட்ரா நாளை (ஜூன் 17) மாலை 4 மணிக்கு ஃபிளிப்கார்ட் தளத்தில் கிடைக்க உள்ளது.

புல்லிட் நிறுவனம் கோடாக் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமத்தை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here