ரூ.999க்கு லாவா ஏ1 கலர்ஸ் ஃபீச்சர் போன் விற்பனைக்கு வந்தது

ரூபாய் 999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள லாவா நிறுவனத்தின் A1 ஒன் கலர்ஸ் மாடலைப் பொறுத்தவரை பல்வேறு வசதிகளை பெறும் ஃபீச்சர் ரக மாடலாக விளங்குகின்றது.

லாவா ஏ1 கலர்ஸ் மொபைலின் பேட்டரி அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு சிறப்பான திறனை கொண்டுள்ளது. 1.8 அங்குல டிஸ்ப்ளே டிஎஃப்டி பேனலுடன் 128 × 160 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டுள்ளது. பாலி-கார்பனேட் பாடியை பெற்றுள்ள இந்த ஃபீச்சர் போனில் ஏழு இந்திய மொழிகளுக்கான ஆதரவையும் வழங்கியுள்ளது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, இந்தி மற்றும் குஜராத்தி ஆகியவை அடங்கும்.

கேண்டி கலர்ஸ் என குறிப்பிடப்படுகின்ற வெளிர் நீலம், பச்சை மற்றும் மெஜந்தா ரெட் ஆகிய நிறங்களுடன் 0.3 மெகாபிக்சல் கேமரா சென்சார் ஆனது பிரைமரியாக உள்ளது.

லாவா குறிப்பிடுகையில் இந்த ஸ்மார்ட்போன் முற்றிலும் இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட மாடலாக குறிப்பிட்டுள்ளது.