4ஜி ஆதரவுடன் கூடிய லாவா A77 ஸ்மார்ட்போன் அறிமுகம்

4ஜி வோல்ட்இ ஆதரவுடன் கூடிய ரூ.6099 விலையில் லாவா  A77 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1ஜிபி ரேம் வசதியுடன் 4.5 அங்குல WVGA திரையை பெற்றதாக விற்பனைக்கு கிடைக்கின்றது.

லாவா A77 ஸ்மார்ட்போன்

இந்திய சந்தையில் மக வேகமாக வளர்ந்து வரும் பட்ஜெட் ரக போட்டியை சமாளிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை 4ஜி வோல்ட்இ ஆதரவுடன் அறிமுகம் செய்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் லாவா மொபைல் தயாரிப்பாளர் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

4.5 அங்குல WVGA திரையை பெற்று 480×800 பிக்சல் தீர்மானத்துடன் இரட்டை சிம் ஆதரவுடன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்துடன் கூடிய 1.3GHz குவாட் கோர் பிராசஸர் பெற்றதாக 1ஜிபி ரேம் திறனுடன் 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு திறனை கொண்டிருத்துடன் கூடுதலாக 32ஜிபி வரை நீடிக்க மைக்ரோஎஸ்டி அட்டையை வழங்கியிருக்கின்றது.

இரு புற கேமராவிலும் 5 மெகாபிக்சல் பெற்று எல்இடி ஃபிளாஷ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. 2000mAh  திறன் கொண்ட பேட்டரியுடன் 4G, VoLTE, 3G, Wi-Fi, புளூடூத் மற்றும் ஜிபிஎஸ் போன்வற்றின் ஆதரவை பெற்றுள்ளது. கோல்டு நிறத்தில் மட்டுமே லாவா ஏ77 மொபைல் கிடைக்கும்.

Recommended For You