ரூ.2400-க்கு லாவா Z50 ஆண்டராய்டு கோ எடிசன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்னணியாக கொண்டு மிக வேகமாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு கோ எடிசன் இயங்குதளத்தில் லாவா Z50 ஸ்மார்ட்போன் ரூ. 4400 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லாவா Z50 ஆண்டராய்டு ஓரியோ (கோ எடிசன்) போன்

ரூ.2400-க்கு லாவா Z50 ஆண்டராய்டு கோ எடிசன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்தியாவின் லாவா மொபைல் போன் நிறுவனம், இந்தியாவில் மலிவு விலை ஸ்மார்ட்போன் மாடலைகளை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. இந்நிறுவனத்தின் லாவா இசட்50 மொபைல் போனுடன் இணைந்து ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் அதிகபட்சமாக ரூ.2000 வரை கேஷ்பேக் ஆஃபரை பெறும் வகையிலான Mera Pehla Smartphone சிறப்பு திட்டத்தை செயற்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தில் ஏர்டெல் 4ஜி சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 36 மாதங்களில் ரூ.2000 வரை கேஷ்பேக் பெறுவதனால் ரூ.2400 என்ற விலையில் மட்டுமே இந்த ஸ்மார்ட்போன் நிகர மதிப்பாக விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் 18 மாதங்களில் ரூ.3500 வரையிலான ரீசார்ஜ் மேற்கொண்டால் முதல் தவனையில் ரூ.500 கேஸ்பேக், மற்றும் அடுத்த 18 மாதங்களில் ரூ.3500  வரையிலான ரீசார்ஜ் மேற்கொண்டால் இரண்டாவது தவனையில் ரூ.1500, என மொத்தமாக ரூ.2000 வரை திரும்ப பெறலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.2400-க்கு லாவா Z50 ஆண்டராய்டு கோ எடிசன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

லாவா Z50 ஸ்மார்ட்போன் 4.5 அங்குல FWVGA திரையை பெற்ற 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பினை பெற்று மீடியாடெக் நிறுவனத்தின் 1.1 GHz குவாட் கோர் பிராசெஸர் பொருத்தப்பட்டு 1ஜிபி ரேம் கொண்டு 8ஜிபி சேமிப்பு அமைப்பினை பெற்றுள்ளது. முன் மற்றும் பின்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டு எல்இடி ஃபிளாஷ் உடன் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் ஸ்டோர்களை தவிர ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.