புதிய ஸ்மார்ட்போன்களில் ஏஐ போட்டோகிராபியை கொண்டு வருகிறது லாவா

லாவா இண்டர்நேசனல் நிறுவனம் தனது புதிய ஸ்டுடியோ மோடு மற்றும் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்களுடன் கூடிய z81 ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது.

லாவா z81 குறித்து லாவா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த லாவா z81 ஸ்மார்ட்போன்கள் 2GB மற்றும் 3GB என இரண்டு வகைகளில் விற்பனை வர உள்ளது. இதில் 3G ஸ்மார்ட்போன்களின் விலை 9,499 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2GB வகை ஸ்மார்ட்போன்களின் விலை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன்களில் ஏஐ போட்டோகிராபியை கொண்டு வருகிறது லாவா

z81 ஸ்மார்ட்போன்களில் 13MP ரியர் கேமரா மற்றும் 13 MP முன்புற கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் குறித்து பேசிய லாவா இண்டர்நேசனல் நிறுவன தலைவர் சுனில் ரைனா தெரிவிக்கையில், இந்த புதிய ஸ்மார்ட்போன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன் போட்டோகிராபியின் அடுத்த நிலை வசதிகளை அனுபவிப்பார்கள். z81 ஸ்மார்ட்போன்கள் மதிப்பு மிக்க தொழில்நுட்பகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

புதிய ஸ்மார்ட்போன்களில் ஏஐ போட்டோகிராபியை கொண்டு வருகிறது லாவா

லாவா z81 ஸ்மார்ட்போன்கள் ஆண்டிராய்டு 8.1 மற்றும் ஸ்டார் ஒஎஸ் 5.0 மூலம் இயங்கும். மேலும் இதில் 3GB ரேம் மற்றும் 32GB ரோம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த டிவைஸ்கள் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ஸ்கீரின் மூலம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இவை, 2.0 GHz குவாட் கோர் ஹீலோ A22சிப்செட்களுடன், 3,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

லாவா நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து z81 கீபோர்ட் ஆப்பை ஸ்விப்ட்கீ கீபோர்ட்டை மேம்படுத்தியுள்ளது.