லாவா மொபைல் தயாரிப்பாளரின் பல்ஸ் ஃபிச்சர் போனில் முதன்முறையாக இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் அறிய உதவும் சென்சார் கொண்டு விலை ரூபாய் 1949 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
புதிய லாவா பல்ஸ் 2.4 இன்ச் டிஸ்ப்ளே க்யூவிஜிஏ தீர்மானம் கொண்ட 32 எம்பி ரேம் மற்றும் 24 எம்பி சேமிப்பகத்துடன் அதிகபட்சமாக 32 ஜிபி வரை விரிவுப்படுத்தலாம். 1,800 எம்ஏஎச் பேட்டரியுடன் பாலிகார்பனேட் பாடியை பெற்று 101 கிராம் எடை கொண்டதாகும்.
இந்த மொபைலின் 0.3MP முதன்மை விஜிஏ கேமராவை பயன்படுத்தி வீடியோ பதிவு செய்வதற்கான வசதியை கொண்டுள்ளது. டார்ச் லைட், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எம்பி3 ஆதரவு, புளூடூத் மற்றும் இரட்டை சிம் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
லாவா பல்ஸ் போனில் பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ள இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு கண்காணிப்பு சென்சார் மூலமாக ‘பல்ஸ் ஸ்கேனரில்’ விரல்களை வைத்தால், உடனடியாக இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு அளவீடுகளை பெறலாம். அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் மூலமாக ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.