lava z40 smarphone

முதல்முறையாக குறைந்த விலை 4ஜி மொபைல் வாங்குபவர்களுக்கு என லாவா Z40 (lava Z40) ஸ்மார்ட்போன் 3,499 ரூபாய் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரு நாட்களுக்கு தாக்குபிடிக்க வல்ல சிறிய 2,250mAh பேட்டரி பெற்றுள்ள இந்த போனில் தமிழ் உட்பட 10 க்கு அதிகமான இந்திய மொழி ஆதரவை கொண்டதாக விளங்குகின்றது.

லாவா Z40 மொபைல் போனில் உள்ள வசதிகள்

4.0 அங்குல டிஸ்பிளேவை கொண்டு கொரில்லா கிளாஸ் பாதுகாப்பை கொண்ட லாவா இசட்40 போனில் பெயர் குறிப்பிடப்படாதா 1.4GHz குவாட் கோர் பிராசெஸருடன் 1 ஜிபி ரேம் பெற்று 8 ஜிபி சேமிப்பை கொண்டதாக வந்துள்ளது. கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்க உள்ளது.

இந்த போனின் கேமரா பிரிவில், 2 மெகாபிக்சல் சென்சார் மற்றும் செல்ஃபி வீடியோ அழைப்புக்கு 2 மெகாபிக்சல் என இரண்டும் ஃபிளாஷ் லைட் உடன் வந்துள்ளது. இந்த மொபைல் போனில் மிக இலகுவாக இயங்கும் ஆண்ட்ராய்டு கோ பதிப்பானது ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி வந்துள்ளது. இரு 4ஜி சிம் கார்டு வோல்ட்இ ஆதரவுடன்,  2,250mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

லாவா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்புத் தலைவரான அஸ்நீத் சிங் கூறும்போது லாவா A44 மிகப்பெரிய வெற்றியால் ஈர்க்கப்பட்டு, முதல் முறையாக ஸ்மார்ட்போன் பயனாளர்களை இலக்கு வைத்து லாவா Z40-ஐ அறிமுகப்படுத்துகிறோம். வலுவான பேட்டரி காப்பு மற்றும் நல்ல ஒலி தரம் மற்றும் லாவா Z40 சரியாக நுழைவு நுழைவு நிலை ஸ்மார்ட்போன்கள் ஒரு பெரிய தேவை உள்ளது. இந்த தொடக்கம் மூலம், அம்சங்களின் தொலைபேசிகளில் இருந்து தங்கள் முதல் ஸ்மார்ட்போன் வரை மேம்படுத்த விரும்பும் பயனர்களுக்கு, இந்தியாவின் மிகவேகமான டிஜிட்டல் பயணத்தின் ஒரு பகுதியாக,  குறைந்த விலை காரணமாக மிகப்பெரிய இழப்பை சந்திக்காமல் பயனாளர்கள் பயனடைவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.