Lava Z61 Pro price in india

இந்தியாவின் லாவா நிறுவனத்தின் உள்நாட்டிலே தயாரிக்கும் நோக்கில் ‘மேட் இன் இந்தியா’ முயற்சியில் லாவா Z61 புரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையாக ரூ.5,774 மதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் வாயிலாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

பட்ஜெட் விலையை நோக்கமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள புதிய மொபைல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. 3,100mAh பேட்டரி பெற்ற இசட்61 புரோ மாடலில் நீலம் மற்றும் சிவப்பு என இரு நிறங்களை பெற்றிருக்குன்றது.

5.45 அங்குல டிஸ்பிளேவினை பெற்று HD+ 18:9 ஆஸ்பெக்ட் விகிதத்துடன் 2.5டி வளைந்த கிளாஸ் பாதுகாப்புடன் பெயர் குறிப்பிடப்படாத 1.6GHz பிராசெஸருடன் இணைக்கப்பட்டு 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பை பெற்றதாக அமைந்துள்ளது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி அட்டை மூலமாக 128 ஜிபி வரை நீட்டிக்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் வெளியிடப்படாத ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுகின்ற லாவா Z61 ப்ரோ மாடலில் பிரைமரி ஆப்ஷனில் 8 மெகாபிக்சல் கேமரா உடன் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.

4G வோல்டி, வை-ஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போன்றவற்றை பெற்றதாக வந்துள்ளது.