ரூ. 9,999க்கு லாவா Z92 ஸ்மார்ட்போன் வெளியானது

லாவா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின், புதிய லாவா Z92 ஸ்மார்ட்போனில் ஏஐ நுட்பத்துடன் இணைக்கப்பட்ட கேமிங் மோடு உடன் ரூ. 9,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லாவா Z92 ஸ்மார்ட்போன்

பட்ஜெட் விலையில் பல்வேறு அம்சங்களை பெற்ற மாடலாக வெளியிடப்பட்டுள்ள லாவா Z92 ஸ்மார்ட்போனில் குறிப்பாக வழங்கப்பட்டுள்ள செயற்கை நுன்ணறிவு சார்ந்த ஏஐ கேமிங் மோடு வாயிலாக கேம் பிரியர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த மொபைலில் விரும்பமான கேம்களையும் தேர்வு செய்து இலகுவாக விளையாடலாம். நாம் விளையாடும் போது இடையில் வரும் அழைப்புகள் மற்றும் சாட்டிங் மெஸ்சேஸ்களினால் ஏற்படுகின்ற தடையில்லாமல் விளையாட முடியும். கேமையும் நிறுத்தி விட்டு அழைப்பு மற்றும் சாட்டிங் மேற்கொள்ளலாம்.

பிறகு இயல்பாகவே கேமிங் மோடுக்கு செல்ல வழி வகுக்கும் வகையில் இசட்92 மொபைல் போனின் சிறப்பு அம்சம் கொண்டுள்ளது.

6.22 அங்குல ஹெச்டி பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டிருப்பதுடன் லாவா இசட்92 ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்போனினை ஒற்றை கையில் இலகுவாக பயன்படுத்த முடியும். கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதால், இந்த ஸ்மார்ட்போனில் எளிதில் கீறல்கள் ஏற்படாது.

ரூ. 9,999க்கு லாவா Z92 ஸ்மார்ட்போன் வெளியானது

ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பெற்ற இசட்92 போனில் 2.0 GHZ ஆக்டோ-கோர் பிராஸெசர் ஹீலியோ P22 சிப்செட் கொண்ட 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உடன் 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தலாம்.

தெளிவான படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்ய  13 மெகா பிக்சல் கேமராவுடன், டூயல் எல்இடி பிளாஷ் லைட் கொண்டிருக்கின்றது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

3260 mAh பேட்டரி உடன் வழங்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பு சலுகையாக ஜியோ கேஸ்பேக் ஆஃபரை வழங்குகின்றது.  ரூ.2200 வரை கேஷ்பேக் ஆஃபரை பெற முடியும்.  ரூ.50 கேஷ்பேக் ஆப்பரை ஓவ்வொரு ஜியோவின் ரூ.198 பிளான், ரூ.299 பிளான் உடனடியாக ஆக்டிவேட் செய்யப்படும்.

லாவா Z92 நுட்ப விபரம்:

6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
2.0 GHZ ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
3 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
13 MP பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
8 MP செல்ஃபி கேமரா
3260 mAh பேட்டரி