12ஜிபி ரேம் வசதியுடன் லெனோவா z5 ப்ரோ GT மொபைல் அறிமுகம்

சீனாவை தலைமையிடமாக கொண்ட லெனோவா நிறுவனம், உலகின் முதல் 12 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனை லெனோவா z5 ப்ரோ GT என்ற பெயரில் சீன சந்தையில் CNY 2,698 ( ரூ.27,700) ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் முதல் 12 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், முதன்முறையாக குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்ட மொபைல் போன் மாடலாக  z5 ப்ரோ GT விளங்குவதுடன் பல்வேறு நவீன அம்சங்களை கொண்டு விளங்குகின்றது.

லெனோவா Z5 ப்ரோ GT 6.39 அங்குல முழு ஹெச்டி (1080×2340 பிக்செல்ஸ்) சூப்பர் அமொல்ட் டிஸ்பிளே உடன் 19.5:9 அக்ஸசப்பட் விகிதம் கொண்டுள்ளது. இதில் பாதுகாப்பு சார்ந்த கார்னரிங் கொரில்லா கிளாஸ் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைலில் இந்நிறுவனத்தின் கஸ்டம் zui 10.0 ஓஎஸ் ஆனது ஆண்ட்ராய்டு 9.0 பை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது.

12ஜிபி ரேம் வசதியுடன் லெனோவா z5 ப்ரோ GT மொபைல் அறிமுகம்

முதன்முறையாக ஸ்னாப்டிராகன் 855, லெனோவா Z5 ப்ரோ ஜிடி ஸ்மார்ட்போனானது, 6ஜிபி, 8 ஜிபி, மற்றும் 12ஜிபி ரேம் என மூன்று வகைகளில் கிடைக்கிறது. இந்த போனில் பின்பக்கம் இரட்டை கேமரா, 16 மெகா பிக்ஸெல்ஸ் சோனி சென்சார் f/1.8 அப்பர்ச்சர் மற்றும் டூயல் டோன் எல்இடி பிளாஷ் உடன் 24 மெகா பிக்ஸெல்ஸ் சோனி சென்சார் உடன் f/1.8 அப்பர்ச்சர் உடன் கிடைக்கிறது.

லெனோவா Z5 ப்ரோ ஜிடி ஸ்மார்டபோனின் வீடியோ கால் மற்றும் செல்பி உட்பட பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப முன்புறத்தில் இரட்டை கேமரா கொண்டுள்ளது. ஒன்று 16 மெகா பிக்ஸெல்ஸ் f/2.2 மற்றும் 8 மெகா பிக்செல்ஸ் ஐஆர் சென்சார் மற்றும் பேஸ்அன்லாக் உடன் வருகிறது.

12ஜிபி ரேம் வசதியுடன் லெனோவா z5 ப்ரோ GT மொபைல் அறிமுகம்

இந்த மொபைல் போன் பெஞ்ச்மார்க் சோதனையில் முன்னணியாக விளங்கும் ஆப்பிள் iPhone XS மாடலை பின்னுக்கு தள்ளியுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவன சிப்செட்டை விட கூடுதல் வேகத்தை பெற்றதாக ஸ்னாப்ண்டிராகன் 855 விளங்கும் என கூறப்பட்டுள்ளது.

லெனோவா Z5 ப்ரோ GT விலை பட்டியல்

லெனோவா Z5 ப்ரோ ஜிடி 6ஜிபி ரேம்/ 128ஜிபி சேமிப்பு – CNY 2,698 (ரூ.27,700)

z5 ப்ரோ GT  8ஜிபி ரேம்/ 128ஜிபி சேமிப்பு  CNY 2,698 ( ரூ.30,800)

z5 ப்ரோ GT 8ஜிபி ரேம்/ 256ஜிபி சேமிப்பு  CNY 3,398 ( ரூ.41,100)

z5 ப்ரோ GT டாப் மாடல் 12ஜிபி ரேம்/ 512ஜிபி சேமிப்பு CNY 4,398 ( ரூ.45,100)

 

இந்திய விலை மதிப்பானது சீன விலையை அடிப்படையாக கொண்ட இந்திய ரூபாயின் தோராயமான விலை மதிப்பாகும். இந்திய உட்பட மற்ற நாடகளில் வெளியிடப்படும் விபரம் அறிவிக்கப்படவில்லை.

12ஜிபி ரேம் வசதியுடன் லெனோவா z5 ப்ரோ GT மொபைல் அறிமுகம்