லெனோவா K10 பிளஸ்

டிரிப்ள் கேமரா வசதியை பெற்றுள்ள லெனோவா K10 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.10,999 விலையில் வெளியிடப்பட்டு பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாளான செப்டம்பர் 30 ஆம் தேதி விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

லெனோவா K10 பிளஸ் மொபைல் 6.2 இன்ச் எச்டி + டிஸ்ப்ளேவுடன் 720 x 1520 பிக்சல்கள் தீர்மானம் கொண்டு 87% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் வந்துள்ளது. இந்த மொபைல் போன் 8.3 மிமீ தடிமன் மற்றும் 172 கிராம் எடை கொண்டது. கைரேகை ஸ்கேனர், டியர்டிராப் நாட்ச் டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்களை பெற்றுள்ளது.

லெனோவா K10 பிளஸில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 SoC  உடன் வந்துள்ள ஒரே வேரியண்டில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. 2TB வரை சேமிப்பை அதிகரிக்க பிரத்யேக மைக்ரோ SD அட்டை ஸ்லாட் உள்ளது.

கேமரா வசதியை பின்புறத்தில் மூன்று மற்றும் முன்பக்கத்தில் ஒரு செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. ஒரு முதன்மை 13MP சென்சார், 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் மற்றும் 5MP டெப்த் சென்சார் உடன் இணைந்து செயல்படுகிறது. முன்பக்கத்தில், கே 10 பிளஸ் போனில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 16 எம்பி கேமரா கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பங்களில் இரட்டை 4ஜி, வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என் / ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். 4050mAh பேட்டரி உடன் வந்துள்ள இந்த போனில் 10W ரேபிட் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. லெனோவா கே10 பிளஸ் ஸ்மார்ட்போனை பிளாக் மற்றும் ஸ்பிரைட் என இரு நிறங்களில் கிடைக்க உள்ளது.