உலகின் முதல் டேங்கோ ஸ்மார்ட்போன் மாடலான லெனோவா பேப் 2 ப்ரோ டேங்கோ ஸ்மார்ட்போன் ரூ. 29,990 விற்பனைக்கு வந்தது. பேப் 2 ப்ரோ ஃபிளிப்கார்ட் வழியாக எக்ஸ்குளூசிவாக விற்பனை செய்யப்பட உள்ளது.

லெனோவா பேப் 2 ப்ரோ டேங்கோ மொபைல் விற்பனைக்கு வந்தது

கூகுள் நிறுவனத்தின் டேங்கோ திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட முதல் டேங்கோ மாடலான பேப் 2 ப்ரோ பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாகும். கூகுள் டேங்கோ மிகவும் சிறப்பு வாய்ந்த பல்வேறு அம்சங்களை கொண்டதாகும்.

கூகுள் டேங்கோ என்றால் என்ன ?

3D எனப்படும் முப்பரிமாண வகையில் புகைப்படங்கள் , ஸ்டீரிட் வியூ , கேம்ஸ் , என பல நவீன அம்சங்களை பெற்ற டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதின் நோக்கமே புராஜெக்ட் கூகுள் டேங்கோ ஆகும். விர்ச்சூவல் ரியாலட்டி (VR) மற்றும் ஆர்க்யூமென்ட் ரியாலிட்டி (AR) என சொல்லப்படுகின்ற உண்மை நிகர்நிலை அனுபவத்தினை பெறலாம். இதில் கேமராக்கள் மற்றும் சென்சார்கள் முக்கிய பங்காற்றும்.

லெனோவா பேப் 2 ப்ரோ டேங்கோ மொபைல் விற்பனைக்கு வந்தது

 

லெனோவா பேப் 2 புரோ

லெனோவா பேப் 2 புரோ மொபைலில் 6.4 இன்ச் குவாட் ஹைச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 652 SoC பிராசெஸருடன் இணைந்த 4GB ரேம் பெற்று செயல்படுகின்றது.  ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாகும்.  32 ஜிபி வரையிலான இன்டர்னல் மெமெரியுடன் 2TB வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்த இயலும்.
15 மணி நேரம் தாக்குபிடிக்க வல்ல 4000mAh பேட்டரியுடன் 16 மெகாபிக்ஸல் ரியர் கேமரா படங்களை மிக சிறப்பாக மோஷன் முறையில் இன்ஃபிராரெட் சென்ஸார் கொண்டு தெள்ள தெளிவான படங்களை வழங்கும்.  முன்பக்கத்தில் 8 மெகாபிக்ஸல் கேமரா பெற்றுள்ளது. டால்பி ஆட்டம்ஸ் 5.1 ஆடியோ பதிவுசெய்வதுடன் 3டி முறையில் ஆடியோவை ரெக்கார்டு செய்யலாம்.
லெனோவா பேப் 2 ப்ரோ டேங்கோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 29,990

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here