இரட்டை கேமரா பெற்ற லெனோவா S5 மொபைல் அறிமுக தேதி விபரம்இரட்டை கேமரா, 3000mAh பேட்டரி கொண்டு மிகவும் சவாலான விலையில் வரவுள்ள லெனோவா S5 மொபைல் போன் மார்ச் 20ந் தேதி வெளியாக உள்ள நிலையில், ரெட்மி நோட் 5 மொபைலுக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்த உள்ளது.

லெனோவா S5 மொபைல்

இரட்டை கேமரா பெற்ற லெனோவா S5 மொபைல் அறிமுக தேதி விபரம்

லெனோவா நிறுவனத்தின் மூத்த அதிகாரி வீபோ சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சிவப்பு நிற லெனோவா எஸ்5 மொபைல் போன் வாயிலாக கைரேகை சென்சார், இரட்டை கேமரா, யூனி மெட்டல் பாடி அம்சத்தை கொண்டதாக காட்சியளிக்கின்றது.

லெனோவா K520 என்ற குறீயிட்டு பெயரில் டினா தரச்சான்றிதழ் இணையதளத்தில் வெளியான விபரங்களின் அடிப்படையில் எஸ்5 மொபைல் போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி 3000mAh பேட்டரி கொண்டு இயக்கப்பட உள்ள நிலையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் கொண்டு 3GB ரேம் மாடலில் 32GB, 4GB ரேம் மாடலில் 64ஜிபி உள்ளீட்டு சேமிப்பு கொண்டு மெட்டல் பாடியுடன் சிவப்பு, கருப்பு, சில்வர் ஆகிய நிறங்களில் 5.65 அங்குல திரையை பெற்று 2160 × 1080 பிக்சல் தீர்மானத்துடன் வரவுள்ளது.

பின்புறத்தில் டூயல் கேமரா கொண்டதாக வரவுள்ள லெனோவா எஸ்5 மொபைல் போனில் 4G VoLTE, வை-ஃபை 802.11 a/b/g/n (2.4GHz + 5GHz) ப்ளூடூத் ஆகிய அம்சங்களை பெற்றிருக்கும்.

வருகின்ற 20ந் தேதி சீனாவில் விற்பனைக்கு வெளியாக உள்ள லெனோவா எஸ்5 மொபைல் இந்திய சந்தையில் அடுத்த மாதம் தொடக்க வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.