ஸ்லைடர் டிசைன், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் அறிமுகமானது லெனோவா Z5 புரோ

லெனோவா Z5 புரோ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் போன்களில் ஸ்லைடர் டிசைன், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் பாரம்பாரிய டிஸ்பிளே நாட்ச்-ம் இடம் பெற்றுள்ளது.

லெனோவா Z5 புரோ ஸ்மார்ட் போன்கள் 95.06 சதவிகித அளவிலான ஸ்க்ரீன்-டு-பாடி அளவில் இருக்கும். மேலும் இதில் உள்ள ஸ்லைடர் மெக்கானிசம் 3 லட்ச முறை சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஸ்லைடர் டிசைன், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் அறிமுகமானது லெனோவா Z5 புரோ

சீனாவை சேர்ந்த லெனோவா நிறுவனம், இந்த ஸ்மார்ட் போனில் இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார்களையும் பொருத்தியுள்ளது. கூடுதலாக, இரண்டு கேமரா சென்சார்கள் உள்ளன. இதில் ஒன்று இன்ஃப்ரா ரெட் சென்சார் கொண்டதாக இருக்கும். இந்த ஸ்மார்ட் போன்கள் ஆக்டோ-கோர் கோல்காம் ஸ்நாப்டிராகன் 710 SoC மற்றும் லெனோவாவின் ப்ரோபரிடேரி ZUI 10 மூலம் இயங்கும்.

லெனோவா Z5 புரோ ஸ்மார்ட்போனின் விலை

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட லெனோவா Z5 புரோ ஸ்மார்ட் போன்கள், 6GB ரேம் மற்றும் 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் கொண்டவை CNY 1,998 விலையில் அதாவது இந்திய மதிப்பில் 21 ஆயிரத்து 400 ரூபாய் விலையிலும் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் கொண்டவை CNY 2,298 விலையில் அதாவது இந்திய மதிப்பில் 24 ஆயிரத்து 300 ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்பட்டது. பிளாக் கலர் ஆப்சன்களில் இந்த ஸ்மார்ட் போன்கள் வரும் 11ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.

ஸ்லைடர் டிசைன், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் அறிமுகமானது லெனோவா Z5 புரோ

ஸ்லைடர் டிசைன் லெனோவா Z5 புரோ ஸ்மார்ட் போன்கள், ஹானர் மேஜிக் 2 மற்றும் சியோமி மீ3 ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன்களில் விலை ஒப்பிடும் பொது நோக்கியா X7 மற்றும் விவோ Z3 ஸ்மார்ட் போன்களுக்கு கடும் போட்டியாக இருக்கும்.

லெனோவா Z5 புரே ஸ்பெசிபிகேஷன், வசதிகள்

டூயல் சிம் கொண்ட லெனோவா Z5 புரோ ஸ்மார்ட் போன்கள் ஆண்டிராய்டு 8.1 ஓரியோ உடன் ZUI 10 ஆபரேடிங் சிஸ்டம் முலம் இயங்கும், மேலும் இந்த போன்கள் 6.39 இன்ச் (1080×2340 பிக்சல்) முழு HD+ சூப்பர் AMOLED டிஸ்பிளேகளுடன் 19.5:9 அங்குலம் கொண்டதாக இருக்கும். இதுமட்டுமின்றி கார்னிங் கொரில்லா கிளாஸ் பேனல் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்லைடர் டிசைன், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் அறிமுகமானது லெனோவா Z5 புரோ

லெனோவா 64GB மற்றும் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்சன்களில் வெளியாக உள்ளது. இந்த போனில் 4G LTE, வை-பை 802.11 a/b/g/b/ac, ப்ளுடூத் v5.0, GPS/A-GPS, NFC மற்றும் USB டைப் C கொண்டதாக இருக்கும். மேலும் இதில் 3,350mAh பேட்டரி போருத்ப்ட்பட்டுள்ளது. இந்த பேட்டரி 155.12×73.04×9.3mm என்ற அளவில் இருக்கும்.