Lenovo Z6 Pro

சீனாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள லெனோவா Z6 ப்ரோ ஸ்மார்ட்போனில், 6ஜிபி, 8ஜிபி, மற்றும் 12ஜிபி ரேம் என மூன்றுவிதமான மாறுபாட்டுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் லெனோவோ இசெட்6 ப்ரோ அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவன் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குவாட்-கேமரா செட்அப், புதிய ஃபிங்கர் பிரின்ட் சென்சார், லீக்யூடு கூலிங் அமைப்பு, ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் போன்றவை இந்த போனில் கவனிக்கதக்க அம்சங்களாகும்.

லெனோவா Z6 ப்ரோ விலை மற்றும் வசதிகள்

சீனாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட மாடலின் அடிப்படையில் இலகுவாக அறிவதற்கு என இந்திய ரூபாய் மதிப்பில் வழங்கியுள்ளோம். லெனோவா இசட் 6 ப்ரோவில் 6ஜிபி + 128 ஜிபி உள் சேமிப்பு ரூ. 30,000, அடுத்து 8ஜிபி + 128ஜிபி வகை உள் சேமிப்பு ரூ. 31,000, 8ஜிபி + 256ஜிபி வகை உள் சேமிப்பு ரூ. 39,000 மற்றும் இறுதியாக டாப் மாடலாக 12ஜிபி + 512ஜிபி வகை உள் சேமிப்பு ரூ. 51,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Lenovo Z6 Pro news in tamil

கருப்பு, நீலம் நிறங்களில் கிடைக்கின்ற இந்த போனில்  6.39 இன்ச் திரையை பெற்று (1080 × 2340 pixels) முழு HD+ AMOLED 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்ட இந்த போனை இயக்க  குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பயன்படுத்தப்பட்டு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் மெமரி, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் மெமரி, 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள் மெமரி,  12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள் மெமரி போன்றவற்றில் கிடைக்கும்.

லெனோவா Z6 ப்ரோ மொபைல் போனில்,  48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 16 மெகாபிக்சல் சென்சார் உடன் வைடு ஆங்கிள் லென்ஸ், 8 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் + 2 மெகாபிக்சல் சென்சார் என கொண்டுள்ள இதில், செயற்கை அறிவுத்திறன் சார்ந்த ஹைப்பர் மோட் மூலம் “சூப்பர் நைட் பயன்முறை”, “காட்சி முறை”, “சூப்பர் மேக்ரோ”, “சூப்பர் பரந்த-கோணம் காட்சிகள் போன்றவற்றை பெறலாம்.

அடுத்து, செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 32எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9 கொண்டு இயக்கப்படுகின்ற இந்த போனில் 27W ஃபாஸ்ட் சார்ஜருடன் கூடிய 4000mAh பேட்டரி, வைபை, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றை பெற்றுள்ளது.

12 ஜிபி ரேமுடன் வந்த லெனோவா Z6 ப்ரோ சிறப்புகள்

Lenovo Z6 Pro specifications

  • 6.39 அங்குல (1080 × 2340 pixels) முழு HD+ AMOLED 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ
  • ஆக்டோ கோர் 855 7nm Mobile Platform (1 x 2.84GHz  Kryo 485 + 3 x 2.42GHz Kryo 485 + 4x 1.80GHz Kryo 485) with Adreno 640 GPU
  • 6GB / 8GB LPDDR4x உடன் 128GB / 256GB உள்சேமிப்பு, 12GB RAM உடன் 512GB உள்சேமிப்பு
  • 512GB வரை மைக்ரோ எஸ்டி ஆதரவு
  • ஹைபிரிட் சிம் ஸ்லாட்
  • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) with ZUI 11
  • 48MP ரியர் கேமரா f/1.8 aperture, PDAF, டுயல் எல்இடி ஃபிளாஷ், 16MP 125 ° ultra-wide-angle camera with f/2.2 aperture,  8MP டெலிபோட்டோ சென்சார் f/2.4 aperture, 2MP சூப்பர் வீடியோ கேமரா f/1.8 aperture, 2.9um, OIS, ToF camera
  • 32MP front-facing camera with f/2.0 aperture
  • இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார்
  • 3.5mm ஆடியோ ஜாக், டால்பி ஆடோம்ஸ்
  • அளவுகள்:157.5×74.6×8.65mm ; எடை: 185g
  • டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடுத் 5, GPS (L1 + L5 dual band) + GLONASS, USB Type-C
  • 27W ஃபாஸ்ட் சார்ஜருடன் 4000mAh பேட்டரி

12 ஜிபி ரேமுடன் வந்த லெனோவா Z6 ப்ரோ சிறப்புகள்