லீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லீபோன் நிறுவனம், இந்தியாவில் புதிதாக டேசேன் 6A என்ற பெயரில் பல்வேறு வசதிகளை பெற்ற மொபைலை ரூ,7,999 விலையில் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்துள்ளது.

லீபோன் டேசேன் 6A

இந்திய சந்தையில் தொடரந்து சீன மொபைல் தயாரிப்பாளர்களின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற நிலையில் , ஓப்போ நிறுவனத்தின் இந்திய பிராண்டாக வெளியான ரியல்மீ போன்று இந்திய சந்தைக்கு என பிரத்தியேகமான பிராண்டாக டேசேன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிராண்டில் நவீன தலைமுறையினர் விரும்பும் வகையிலான அம்சங்கள் , புதிய நுட்பங்கள் , விரைவாக செயல்படும் வகையிலான வசதிகளை பெற்று விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

லீபோன் டேசேன் 6ஏ மொபைல் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை பின்பற்றி செயல்படுவதுடன்,  18:9 ஆஸ்பெக்ட் விகிதம், 2.5D  வளைந்த கிளாஸ் பாதுபாப்பு அம்சத்துடன் கூடிய 5.7 அங்குல HD+ (720×1440 pixels) LTPS திரையை பெற்று விளங்குகின்றது. 3 ஜிபி ரேம் 32 ஜிபி உள்ளீட்டு சேமிப்பை பெற்று விளங்குகின்ற டேசேன் 6ஏ போனில் குவாட் கோர் மீடியாடெக் MT6737H சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்றது. கூடுதலாக சேமிப்பை விரிவுப்படுத்த 128 ஜிபி மெம்மரி கார்டினை பயன்படுத்தலாம்.

கேமரா துறையில் டேசேன் 6ஏ பல்வேறு வசதிகளை பெற்று நிலையில், பின்புற பிரைமரி கேமரா இரட்டை கேமரா பிரிவை பெற்றுள்ளது. 13 மெகாபிக்சல் மற்றும் 0.3 மெகாபிபக்சல் விஜிஏ ஆகிய சென்சாரை பெற்று இரட்டை எல்இடி ஃபிளாஷ் பெற்றதாக வந்துள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 5 மெகாபிக்சல் சென்சார் பெற்றுள்ளது.

3000mAh Li-Po பேட்டரி கொண்ட லீபோன் டேசேன் 6ஏ மொபைலில் 4G LTE (including Band 40), Wi-Fi, ப்ளூடூத் 4.0, எஃப்எம் ரேடியோ, USB Type-C, GPS/ A-GPS, மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றுடன் ஃபேஸ் அன்லாக், கைரேகை சென்சார் போன்றவற்றை பெற்றுள்ளது.

ஆஉப்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்க உள்ள லீபோன் டேசேன் 6A விலை ரூ.7,999 ஆகும்.

Recommended For You