மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறது எல்ஜி

சாம்சங் நிறுவனம் மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்த பின்னர், தென்கொரியா நிறுவனமான எல்ஜி நிறுவனம் தற்போது மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன் குறித்த தகவல்களை வெளிய்டிடுள்ளது. இதற்காக Flex மற்றும் Foldi மற்றும் Duplex என்ற பெயர்களை EUIPO-வில் எல்ஜி நிறுவனம் பதிவு செய்துள்ளது. இருந்தபோதும், இந்த பெயர்கள் ஸ்மார்ட்போனுக்காகவா? அல்லது வேறு எந்த ஒரு டிசைன்களுக்காகவா? என்று உறுதியாக தெரியவில்லை.

மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறது எல்ஜி

ஸ்மார்ட்போன் உள்பட Class 9 வகைகளை மூன்று அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், எல்ஜி நிறுவனம் இந்த பெயர்களை, தங்கள் மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்கள் அல்லது மற்ற டிவைஸ்களில் பயன்புட்தும் என்று தகவல்வெளியாகியுள்ளது.Flex மற்றும் Foldi ஆகியவை சாம்சங் கேலக்ஸி F மற்றும் ஹவாய் நிறுவனத்தின் Flexi/Flex டிரெட் மார்க்களுடன் நேரடியாக ஒத்து போகிறது.

மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறது எல்ஜி

Duplex என்பது எல்ஜி நிறுவனத்தின் மற்றொரு தேர்வாக உள்ளது. குறிப்பாக இந்த வார்த்தையை கூகிள் நிறுவனம் தனது AI-காலிங் வச்திகளுக்கு பயன்படுத்தி வருகிறது என்று இதுகுறித்து வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்களை, 5G நெட்வோர்க் உடன் கேலக்ஸி S10 என்ற பெயரில் அறிமுகம் செய்ய முயற்சி செய்து வருகிறது.