எல்ஜி G8 தின்க்யூ மற்றும் எல்ஜி V50 தின்க்யூ ஸ்மார்ட்போன் வெளியானது

5ஜி தொலைதொடர்பு பெற்ற எல்ஜி V50 தின்க்யூ மொபைலில் கூடுதலாக ஸ்கீரினை இணைக்கும் வசதி இடம் பெற்றுள்ளது. மற்றொரு எல்ஜி G8 தின்க்யூ ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா பெற்ற மாடலாக விளங்குகிறது.

இரு ஸ்கீரின்களை பெற்ற எல்ஜி வி50 தின்க்யூ மிக வேகமாக இயங்கக்கூடிய வகையில் கேமிங் சார்ந்த அம்சங்களுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசெஸர் உடன் 6 ஜிபி ரேம் பெற்றதாக வந்துள்ளது.

எல்ஜி V50 தின்க்யூ 5ஜி மொபைல் போன் சிறப்புகள்

எல்ஜி வி50 தின்க்யூ ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள pogo pin மூலம் இரண்டாவது திரையை தேவைப்படும்போது இணைத்துக் கொள்ளலாம். இந்த திரையை இணைக்கப்படும் போது கேமிங் ஆப்களை மிக சுலபமாக இரு திரையில் பயன்படுத்தலாம். கன்ட்ரோல் சுவிட்சுகள் மொபைலில் வழங்கப்படும். இணைக்கப்படுகின்ற திரையில் 6.2 அங்குல OLED பேனலுடன்  1,080 x 2,160 பிக்சல்ஸ் தீர்மானத்தை பெற்றுள்ளது. மேலும் திரைகளில் இரு வேறு செயலிகளை ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம்.

எல்ஜி G8 தின்க்யூ மற்றும் எல்ஜி V50 தின்க்யூ ஸ்மார்ட்போன் வெளியானது

வி50 தின்க்யூ மொபைல் போனில் 6.4 அங்குல முழுவிஷன் OLED திரையுடன், பிக்செல்ஸ் தீர்மானத்தை கொண்டதாகவும், 5ஜி ஆதரவை வழங்க ஸ்னாப்டிராகன் X50 5G மோடம் இணைக்கப்பட்டு ஸ்னாப்டிராகன் 855 பிராசெஸர் உடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பை பெற்று கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 2 TB வரை விரிவுப்படுத்தப்படலாம்.

எல்ஜி V50 தின்க்யூ போனில், பிரைமரி தேர்வாக மூன்று கேமரா ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. 16MP சூப்பர் வைட் ஏங்கிள் லென்ஸ், 12MP லென்ஸ் மற்றும் 12MP டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவற்றை பெற்றுள்ளது.

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு டூயல் கேமரா ஆப்ஷன் வழங்கப்பட்டு 8MP லென்ஸ் மற்றும் 5MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டு சிறப்பான படங்களை பெற உதவுகின்றது. 5ஜி , 4ஜி எல்டிஇ, வை-ஃபை, ப்ளூடூத் 5, என்எஃப்சி மற்றும் யூஎஸ்பி Type-C போர்ட் உள்ளிட்ட ஆதரவுகளுடன், கைரைகை சென்சார் , தூசு மற்றும் நீரிலிருந்து பாதுகாக்கும் நுட்பத்திற்கான ஐபி68 சான்றிதழ் கொண்டு 4,000mAh பேட்டரி உடன் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை பெற்றுள்ளது.

எல்ஜி G8 தின்க்யூ மற்றும் எல்ஜி V50 தின்க்யூ ஸ்மார்ட்போன் வெளியானது

எல்ஜி G8 தின்க்யூ ஸ்மார்ட்போன் சிறப்புகள்

முந்தைய ஜி7 மாடலை விட சிறப்பாக அமைந்துள்ள எல்ஜி ஜி8 தின்க்யூ போனில், 6.1 அங்குல முழுவிஷன் OLED திரையுடன், 3120 x 1440 பிக்செல்ஸ் தீர்மானத்தை கொண்டதாகவும், ஸ்னாப்டிராகன் 855 பிராசெஸர் உடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பை பெற்று கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 2 TB வரை விரிவுப்படுத்தப்படலாம். இந்த போனில், சிவப்பு , கருப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் உள்ளது.

எல்ஜி ஜி8 தின்க்யூ போனில், பிரைமரி தேர்வாக மூன்று கேமரா ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. 16MP சூப்பர் வைட் ஏங்கிள் லென்ஸ், 12MP லென்ஸ் மற்றும் 8MP டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவற்றை பெற்றுள்ளது.

எல்ஜி G8 தின்க்யூ மற்றும் எல்ஜி V50 தின்க்யூ ஸ்மார்ட்போன் வெளியானது

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு டூயல் கேமரா ஆப்ஷன் வழங்கப்பட்டு 8MP லென்ஸ் உடன் டைம் டூ ஃபிளைட்  சென்சார் ஆப்ஷன் வழங்கப்பட்டு சிறப்பான படங்களை பெற உதவுகின்றது.

4ஜி ஆதரவை பெற்ற இந்த போனில் மிக விரைவாக சார்ஜ் ஆகின்ற நுட்பத்துடன் கூடிய 3,500mAh பேட்டரி கொண்டுள்ளது. மிக சிறப்பான ஆடியோ திறனை பெற OLED நுட்பம், கைரைகை சென்சார் , தூசு மற்றும் நீரிலிருந்து பாதுகாக்கும் நுட்பத்திற்கான ஐபி68 சான்றிதழ் உள்ளிட்ட அம்சங்களை பெற்றதாக வந்துள்ளது.

இரு மொபைல் போன்களின் விலை மற்றும் அறிமுக தேதி உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை.

எல்ஜி G8 தின்க்யூ மற்றும் எல்ஜி V50 தின்க்யூ ஸ்மார்ட்போன் வெளியானது