எல்ஜி டபிள்யூ

எல்ஜி ஸ்மார்ட்போன் தயாரிப்பு பிரிவில், புதிதாக வெளிவரவுள்ள எல்ஜி W சீரிஸ் டிரிப்ள் கேமரா ஆப்ஷனுடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. சாம்சங், சியோமி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் மாடலாக விளங்கும்.

அமேசான் இந்தியா ஆன்லைன் மூலம், பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட உள்ள எல்ஜி டபிள்யூ சீரிஸ் மாடல் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எல்ஜி டபிள்யூ ஸ்மார்ட்போன் சீரிஸ்

விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள தேதி குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் அமேசான் வலைதளத்தில் பிரேத்தியேகமான பக்கம் லைவ் ஆக தொடங்கியுள்ளது.

பல்வேறு வலைதளங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி மற்றும் டீசர் அடிப்படையில் டிரிப்ள் கேமரா செட்டப் ஆனது பிரைமரி கேமரா, அல்ட்ரா வைட் ஏங்கிள் மற்றும் டெப்த் சென்சார் பெற்று , நாட்ச் டிஸ்பிளே ஆப்ஷனுடன் மீடியாடெக் ஹீலியோ P60 சிப்செட் கொண்டதாக விற்பனைக்கு வரக்கூடும். மேலும் இந்த போனில் 4000mAh பேட்டரி ஆப்ஷன் கொண்டதாக அமைந்துள்ளது.

lg w series

கருப்பு, பச்சை மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்ட நிறம் என மூன்று நிறங்களை பெற்றதாகவும் விளங்க உள்ளது. அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு எல்ஜி W சீரிஸ் வெளியாக உள்ளது.