சாம்சங் மற்றும் ஹவாய் நிறுவனத்திற்கு போட்டியாக மடிக்கும் வசதி கொண்ட  போன் வெளியிடப்படும்: எல்ஜி அறிவிப்பு

அடுத்த ஆண்டில் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட் போனை வெளியிட உள்ள சில நிறுவனங்களில் ஒன்றாக எல் ஜி நிறுவனமும் மாறியுள்ளது. தற்போது டிரெண்டிங் ஆகிய வரும் மல்டி கேமரா, இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் டிஸ்பிளே நாட்ச்களுடன், அடுத்த ஆண்டு பல வழிகளில் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங், ஹவாய், மைக்ரோசாப்ட், சியோமி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இதுபோன்ற ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளன. எல்ஜி நிறுவனமும் இது போன்ற டிஸ்பிளேகளை மேம்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, தென் கொரியா நிறுவனமான எல்ஜி நிறுவனம் வரும் 2019ம் ஆண்டில் நடக்க உள்ள நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் ஷோவில், மடிக்கும் வசதி கொண்ட போன் வெளியிடப்படும் என்று எல்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரபலமான டிப்ஸ்டர் இவன் பல்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எல்ஜி நிறுவனம், தனது வரும் 2019ம் ஆண்டில் நடக்க உள்ள நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் ஷோவில், மடிக்கும் வசதி கொண்ட போனை வெளியிடும் என்று குறிப்பிட்டுள்ளார். சாம்சங் நிறுவனம் இதுபோன்ற போன்களை தயாரிக்கிறதா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும், எல்ஜி நிறுவனம் வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் மடிக்கும் வசதி கொண்ட போன் வெளியிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சாம்சங் மற்றும் ஹவாய் நிறுவனத்திற்கு போட்டியாக மடிக்கும் வசதி கொண்ட  போன் வெளியிடப்படும்: எல்ஜி அறிவிப்பு

இதுகுறித்து எல்ஜி நிறுவன்ம சர்வதேச கார்ப்பரேட் கம்யுனிகேஷன் தலைவர் கீன் ஹாங் தெரிவிக்கையில், வரும் 2019 ஜனவரி 8 முதல் 11ம் தேதி லாஸ் வேகாஸ்சில் நடக்க உள்ள நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் ஷோவில், எல்ஜி நிறுவனம் வமடிக்கும் வசதி கொண்ட போன் வெளியிடப்படும் என்றார்.

சாம்சங் நிறுவனம் ஏற்கனவே மடிக்கும் வசதி கொண்ட போன் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது குறித்த கேள்வி பதிலளித்த அவர், சாம்சங் நிறுவனம்
வரும் 2019ம் ஆண்டில் நடக்க உள்ள நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் ஷோவில், மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யுமா என்பது தனக்கு தெரியாது என்றார்.

சாம்சங் மற்றும் ஹவாய் நிறுவனத்திற்கு போட்டியாக மடிக்கும் வசதி கொண்ட  போன் வெளியிடப்படும்: எல்ஜி அறிவிப்பு

இந்நிலையில், சாம்சங் நிறுவனம் தங்கள் முதல் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட் போனை இந்தாண்டில் வெளியிட தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் மாதத்திலேயே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்த்தில் சாம்சங் நிறுவனம் வெளியிட்ட பதிவில், இந்த புதிய ஸ்மார்ட்போனின் டீசர் வரும் 7 முதல் 8ம் தேதி வரை நடக்க உள்ள சாம்சங் டெவலப்பர் கான்பிரன்ஸில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹவாய் நிறுவனமும் 5G மடிக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன்களை வெளியிட்ட உள்ளதை கடந்த மாதமே உறுதி செய்துள்ளது.