இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய வரவாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் இரட்டை கேமரா வசதி கொண்ட எல்ஜி V30 பிளஸ் மொபைல் போன் மாடலை ரூ.44,490 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

எல்ஜி V30+

வருகின்ற டிசம்பர் 18ந் தேதி முதல் அமேசான் இந்தியா இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ள எல்ஜி வி30 பிளஸ் கருவி மிக அகலமான முழு விஷன் காட்சித்திரை பெற்றதாக வந்துள்ளது.

எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போன் 6 அங்குல ஃபுல்விஷன் QHD+ 1440×2880 பிக்சல் தீர்மான டிஸ்பிளே கொண்டுள்ள இந்த மொபைலில் பின்புறத்தில் இரட்டை கேமரா செட்டப் பெற்றிருக்கின்றது.

வி30 பிளஸ் மொபைல் போன் 2.35GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் வந்துள்ளது. கேமரா துறையில் பின்புறத்தில் இரட்டை கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 16 மெகாபிக்சல் மற்றும் 13 மெகாபிக்சல் என இரட்டை சென்சார் இடம்பெற்றிருப்பதுடன் ஹைபிரிட் முறையில் ஆட்டோஃபோகஸ் கொண்டதாக வந்துள்ளது.

முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பீ படங்களை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

டால்பி விஷன், HDR10, உயர்தர ஆடியோ-வை பெற ஹை-ஃபை குவாட் DAC, ஃபேஸ் ஐடி அன்லாக், உள்ளிட்ட வசதிகளுடன் இரட்டை சிம் ஆதரவினை கொண்டு, 4ஜி வோல்ட்இ ஆதரவுடன் கொண்டுள்ள எல்ஜி வி30 பிளஸெஃ கருவி ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை பின்பற்றி 3,300mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

எல்ஜி V30+ ஸ்மார்ட்போன் விலை ரூ.44,990