எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் 5 கேமராக்களை பெற்ற எல்ஜி வி40 தின்க்யூ ஸ்மார்ட்போனை ரூ.49,990 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. அமேசான் இந்தியா தளத்தில் விற்பனைக்கு ஜனவரி 20 முதல் கிடைக்க உள்ளது.

LG V40 THINQ

கிரேட் இந்தியன் சேல் ஜனவரி 20ந் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த விற்பனையில் வெளியிடப்பட உள்ள வி40 திங்க்யூ மொபைல் போன் முதற்கட்டமாக அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு இன்று பகல் 12 மணி முதல் கிடைக்கின்றது. மற்ற உறுப்பினர்களுக்கு நள்ளிரவு 12 மணி முதல் கிடைக்க உள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

6.4 இன்ச் (1440×3120) ஓஎல்இடியுடன், 19.5:9 கார்ணரிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புகளுடன் வருகிறது. மிக நேர்த்தியாக வடிவமைப்பை பெற்ற இந்த மொபைலில் பின்புறத்தில் கிடைமட்டமாக மூன்று கேமராக்கள் வழங்கப்பட்டு எல்இடி ஃபிளாஷ் இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் இரண்டு கேமராக்கள் உள்ளன. இந்த மொபைல் போன் கிரே மற்றும் நீல நிறங்களில் கிடைக்கின்றது.

பிராசெஸர் & ரேம்

எல்ஜி வி40 மொபைலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டு செயல்படுகின்ற 6ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது. மேலும் 512GB வரை மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டு சேமிப்பை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்

கேமரா

செயற்கை நுண்ணறிவு கொண்ட அம்சத்தை பெற்ற பின்புறத்தில் மூன்று கேமராக்கள் மற்றும் முன்புறம் இரண்டு செல்ஃபி கேமராக்கள் கொண்டுள்ளது. பின்புறம் 12 மெகா பிக்ஸ்செல் சென்சார் f/1.5 அப்பச்செர், பிரைமெரி லென்ஸ் கொண்ட கேமரா, 16 மெகா பிக்ஸ்செல் சென்சார் அகலமாக காட்சிப்பதிவு செய்யும் லென்ஸ் கொண்ட மற்றும் 12 மெகா பிக்ஸ்செல் சென்சார் தொலைதூர பார்வை லென்ஸ் கொண்ட கேமரா என மூன்று கேமராக்கள் உள்ளன.

முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு  8 மெகா பிக்சல்ஸ் சென்சார் f/1.9 அப்பச்செர், மற்றும் 8 மெகா பிக்சல்ஸ் கேமராவுடன் வந்துள்ளது.

பேட்டரி

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகின்ற எல்ஜி வி40 தின்க்யூ போனில் விரைவில் சார்ஜ் ஏறும் வகையில் 3.0 வசதியுடன் கூடிய 3,300mAh பேட்டரி கொண்டுள்ளது. மேலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

மற்றவை

எல்ஜி வி40 தின்க் மொபைலில் நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கும் வகையில் IP68 கொண்டுள்ளது. 4ஜி வோல்டிஇ,  வயர்லெஸ் சார்ஜிங், யூஎஸ்பி – சி டைப் அம்சங்களை கொண்டுள்ளது. இந்த போன் 158.7×75.8×7.79mm அளவு மற்றும் 169 கிராம் எடை ஆகும்.

எல்ஜி வி40 தின்க்யூ விலை

எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விலை ரூ.49,990 ஆகுஃ. அமேசான் இந்தியா தளத்தில் பிரத்தியேகாக விற்பனை செய்யப்படுகின்றது.