எல்ஜி W30 ப்ரோ

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய எல்ஜி W சீரிஸ், எல்ஜி W10, W30, மற்றும் W30 ப்ரோ என மூன்று ஸ்மார்ட்போன் பாடல்கள் பல்வேறு வசதிகளுடன் மிக குறைவான அறிமுக விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

சியோமி மற்றும் சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சவாலினை ஏற்படுத்தும் வகையில் ஆன்லைன் வலைதளம் அமேசான் இந்தியாவில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது.  இந்த மொபைலில் எல்ஜி  W10, W30 மாடல்கள் விலை அறிவிக்கப்பட்டு ஜூலை 3 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்க உள்ளது. எல்ஜி W30 ப்ரோ மாடல் விலை மற்றும் விற்பனை தேதி அறிவிக்கப்படவில்லை.

எல்.ஜி W சீரிஸ்

குறைந்த விலை கொண்ட எல்ஜி W10  போனில் 19: 9 விகிதத்துடன் 6.19 அங்குல எச்டி + டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதனை இயக்க மீடியாடெக் ஹீலியோ பி 22 சிப்செட் பெற்றுள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காக, எல்ஜி டபிள்யூ 10 மாடலில் இரட்டை கேமரா அமைப்பு பெற்றுள்ளது. 13 மெகாபிக்சல் சென்சார் உடன் 2 எக்ஸ் ஜூம் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பெற்ற டபிள்யூ10 மாடலை இயக்க 4000mAh பேட்டரி உள்ளது.

எல்ஜி W10 ஸ்மார்ட்போன் விலை ரூபாய் 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எல்ஜி W10

எல்ஜி W30 விலை மற்றும் விபரம்

6.26 அங்குல எச்டி + திரை கொண்ட இந்த போனில் டிரிப்ள் கேமரா செட்டப் உள்ளது.  2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 13 மெகாபிக்சல் வைட்-ஏங்கிள் சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் குறைந்த ஒளி உள்ள இடங்களுக்கான சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 16 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது. எல்ஜி W10 மொபைல் போலவே, W30 ஹீலியோ பி 22 சிப்செட் உடன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் இயங்குகிறது.

ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பெற்ற டபிள்யூ30 மாடலை இயக்க 4000mAh பேட்டரி உள்ளது. எல்ஜி W30 ஸ்மார்ட்போன் விலை ரூபாய் 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எல்ஜி W30

எல்ஜி W30 ப்ரோ விபரம்

W30 மாடலை அடிப்படையாக கொண்ட W30 ப்ரோ மாடலில் முக்கிய மாற்றமாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் கொண்டு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்புடன் இயங்குகிறது. மேலும் 4000mAh பேட்டரி உடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

5 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 8 மெகாபிக்சல் வைட்-ஏங்கிள் சென்சார் மற்றும் 13 மெகாபிக்சல் குறைந்த ஒளி உள்ள இடங்களுக்கான சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

ஜூலை 3 ஆம் தேதி முதல் எல்ஜி டபிள்யூ 10 , டபிள்யூ 30 மாடல் விற்பனைக்கு அமேசான் இந்தியா தளத்தில் கிடைக்க உள்ளது.

எல்ஜி W30 ப்ரோ