புதிய AI அடிப்படையிலான ஸ்பீக்கர்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது எல்ஜி

மிகவும் திறன் வாய்ந்த மியூசிக் அனுபவத்தை அளிக்கும் நோக்கில் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிய ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்பீக்கர்களில் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மற்றும் “மெரிடியன் ஆடியோ”களுடன் வெளியாகியுள்ளன.

புதிய வகையான ஆடியோ டிவைஸ்களில், PK சீரிஸ் மற்றும் LG “XBOOM AI ThinQ WK7” போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். LG PK3 10,990 ரூபாய் விலையிலும், PK5 வகைகள் 14,990 ரூபாயிலும், PK7 வகைகள் 22,990 ரூபாயிலும், “W7ThinQ” வகைகள் 27,990 ரூபாய் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய AI அடிப்படையிலான ஸ்பீக்கர்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது எல்ஜி

தென்கொரியா நிறுவனமான எல்ஜி நிறுவனம், பிரிட்டனை சேர்ந்த மெரிடியன் ஆடியோ நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்பீக்கர்களை உருவாக்கியுள்ளது.

இந்த புதிய ஸ்பீக்கர்கள் குறித்து பேசிய எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் வீட்டு எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு இயக்குனர் யுனௌல் பார்க், எல்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் மாறி வருகிறது. புதிய டிரென்ட்களுக்கு ஏற்ற வகையில், நாங்களும் மாறி வருகிறது. இந்த புதிய தொழில்நுட்ப கண்டிப்பாக AI சார்ந்ததாக இருக்கும். எனவே இந்த தொழில்நுட்பத்தை புதிய ஸ்பீக்கர்களில் பயன்படுத்தியுள்ளோம். என்றார்.

LG “XBOOM AI ThinQ WK7” ஸ்பீக்கர்கள் சிலிண்டர் வடிவில், 135mm x 210.7mm x 135mm என்ற அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கரை சுற்றி கிரில் வார்ப் இருப்பது தெரியாத அளவில் பினிஷிங் செய்யப்பட்டுள்ளது.

புதிய AI அடிப்படையிலான ஸ்பீக்கர்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது எல்ஜி

இந்த ஸ்பீக்கர்கள் கூகிள் ஆண்டிராய்டு திங்க்ஸ் பிளாட்பார்மில் உருவகப்பட்டுள்ளது. இந்த பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ள முதல் தயாரிப்பு இதுவாகும். இதன் மூலம் பயனாளர்கள், தகவல் பெறுவது, காலநிலை அறிக்கைகளை தெரிந்து கொள்வது, காலண்டர் செக் செய்வது, போன் கால் செய்வது மற்றும் வீட்டில் உள்ள ஸ்மார்ட் டிவைஸ்களை கண்ட்ரோல் செய்வது போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

இந்த PK சீரிஸ் ஸ்பீக்கர்களை எளிதாக தூக்கி செல்ல வசதியாக இருக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. முன்புற ஸ்பீக்கர்கள் கிரில்களுடன் உள்ளதால், பயனாளர்கள் டூயல் டுவிஸ்ட்டர் மற்றும் ஊப்பர்களை பார்க்க முடியும். டூயல் பாஸிவ் ரேடியேட்டகள் இடம் பெற்றுள்ளதால், இந்த ஸ்பீக்கர்கள் அதிக பவரை எடுத்து கொள்ளாமலேயே, சிறந்த பேஸ்-ஐ வெளியிடும்.