ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக பிரிவின் LYF  பிராண்டில் புதிய வின்ட் 1 மற்றும் வாட்டர் 7 ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எல்ஒய்எஃப் பிராண்டு மொபைல்கள் ஆன்லைன் மற்றும் அஃப்லைன் வழியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ரிலையனஸ் டிஜிட்டல் மற்றும் ரிலையன்ஸ் எக்ஸ்பிரஸ் வழியாக விற்பனை செய்யப்படுகின்றது. இரு மொபைல்களும் இந்திய 4G  எல்டிஇ பேண்டுகளுடன் VoLTE மற்றும் தெளிவான ஹெச்டி வாய்ஸ் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

  • LYF வின்ட் 1 விலை ரூ.6,899
  • LYF வாட்டர் 7 விலை ரூ. 12,999
LYF வின்ட் 1
 LYF வின்ட் 1 ஸ்மார்ட்போனில் 5 ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸருடன் இணைந்த 1GB ரேம் பெற்றுள்ளது.
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்துடன் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா , 5 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா பெற்றுள்ள வின்ட் 1 மொபைலில் 64GB வரையிலான மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்த இயலும்.

LYF வாட்டர் 7
வாட்டர் 7 ஸ்மார்ட்போனில் சில்வர் மற்றும் கோல்டு வண்ணங்களுடன் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி திரையுடன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸருடன் இணைந்த 2GB ரேம் பெற்றுள்ளது..
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்துடன் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா , 5 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா பெற்றுள்ள வாட்டர் 7 மொபைலில் 16 ஜிபி இன்ட்ரனல் நினைவகத்துடன் 128GB வரையிலான மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்த இயலும்.
LYF மொபைல்கள் வாங்க ;  LYF Mobiles