ஆன்ராய்டு 9 பை யுடன் சாம்சங் கியர்-ஐ இணைக்க முடியவில்லை என்ற புகார் விரைவில் சரி செய்யப்படும்: சாம்சாங் அறிவிப்பு

கூகிள் ஆண்டிராய்டு 9 பை, மொபைல் ஆப்ரேடிங் சிஸ்டம் இந்த வாரத்தில் கூகிள் பிக்சல் ஹேன்ட்செட்களில் வெளியாகியுள்ளது. இந்தாண்டின் மார்ச் மாதம் முதல் பீட்டா நிலையில் இருந்த இந்த ஆப்ரேடிங் சிஸ்டம், தற்போது நிலையாக வெளியானது. இருந்தபோதும் பிரச்சினைகள் முற்றிலும் இல்லாமல் இல்லை.

சமீபத்திய பிரச்சினையாக, சாம்சங் கியர் ஸ்மார்ட்வாட்ச், பிட்னஸ் பேன்ட் மற்றும் ஹோன்ட்செட் பயன்படுத்துபவர்கள், தங்களுக்கு ஆண்டிரைய்டு ஸ்மார்ட்போன்களில் கனெக்டிவிட்டி பிரச்சினை இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.

ஆன்ராய்டு 9 பை யுடன் சாம்சங் கியர்-ஐ இணைக்க முடியவில்லை என்ற புகார் விரைவில் சரி செய்யப்படும்: சாம்சாங் அறிவிப்பு

இந்த பிரச்சினை சாம்சங் கியர் பிட் 2, கியர் ஐகான் எக்ஸ் மற்றும் கியர் ஐகான் எக்ஸ் 2018 ஆகிய மாடல்களிலும் உள்ளதாக தெரிவிக்கிறது. இதை தொடர்ந்து, பிரச்சினையை சரி செய்ய தற்காலிகமான மற்றும் அதிகாரப்பூர்வமற்ற பணிகள் செய்யப்பட்டு, பயனாளர்கள் தங்கள் சாப்ட்வேரை அப்டேட் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

ஆன்ராய்டு 9 பை யுடன் சாம்சங் கியர்-ஐ இணைக்க முடியவில்லை என்ற புகார் விரைவில் சரி செய்யப்படும்: சாம்சாங் அறிவிப்பு

இந்த பிரச்சினை குறித்து XDA வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சாம்சுங் நிறுவனம் சில தனியார் API-களை கியர் டிவைஸ்களில் பயன்படுத்தி வருகிறது, இதனாலேயே பிரச்சினை ஏற்பட்டது. இந்த பிரச்சினையை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக my.keystore பைலை எனேபில் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.