மைக்ரோமேக்ஸ் பாரத் 4, பாரத் 3, பாரத் 2 பிளஸ் விரைவில்இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கூகுள் சான்றிதழ் பெற்ற குறைந்த விலை பாரத் ஸ்மார்ட்போன் வரிசையில் மைக்ரோமேக்ஸ் பாரத் 4, பாரத் 3, பாரத் 2 பிளஸ் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 4, பாரத் 3, பாரத் 2 பிளஸ்

மைக்ரோமேக்ஸ் பாரத் 4, பாரத் 3, பாரத் 2 பிளஸ் விரைவில்

கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட பாரத் சீரிஸ் மொபைலில் முதன்முதலாக வெளிவந்த பாரத் 2 மொபைல் 4ஜி வோல்ட்இ மார்ஷ்மெல்லோ ஆதரவுடன் 4 அங்குல திரையுடன் 512 எம்பி ரேம் கொண்டதாக 2 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் விஜிஏ செல்பி கேமரா கொண்டதாக ரூ.3,499 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

பாரத் 2 பிளஸ்

முந்தைய மாடலின் அடிப்படையில் வந்துள்ள பாரத் 2 பிளஸ் 4 அங்குல WVGA டிஸ்பிளேவுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்துடன் வந்துள்ள மாடலில் கேமரா தற்போது பின்புறத்தில் 5 மெகாபிக்சல் சென்சார் மற்றும் முன்புறத்தில் 2 மெகாபிப்சல் சென்சார் பெற்றதாக உள்ளது. இதில் ரேம், பேட்டரி உள்ளிட்ட எந்த விபரங்களும் குறிப்பிடபடவில்லை.

பாரத் 3

பாரத் 3 மொபைல் 4.5 அங்குல WVGA டிஸ்பிளேவுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்துடன் வந்துள்ள மாடலில் கேமரா தற்போது பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் பெற்ற 5 மெகாபிக்சல் சென்சார் மற்றும் முன்புறத்தில் 2 மெகாபிப்சல் சென்சார் பெற்றதாக உள்ளது. இதில் ரேம், பேட்டரி உள்ளிட்ட எந்த விபரங்களும் குறிப்பிடபடவில்லை.

மைக்ரோமேக்ஸ் பாரத் 4, பாரத் 3, பாரத் 2 பிளஸ் விரைவில்

பாரத் 4

மைக்ரோமேக்ஸ் பாரத் 4 ஸ்மார்ட்போன் 5 அங்குல WVGA டிஸ்பிளேவுடன் 2.5 டி வளைந்த கிளாஸ் பாதுகாப்புடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 16ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்துடன் வந்துள்ள மாடலில்  பின்புறத்தில் 5 மெகாபிக்சல் சென்சார் மற்றும் முன்புறத்தில் 2 மெகாபிப்சல் சென்சார் பெற்றதாக உள்ளது. இதில் ரேம், பேட்டரி உள்ளிட்ட எந்த விபரங்களும் குறிப்பிடபடவில்லை.

மைக்ரோமேக்ஸ் பாரத் 4, பாரத் 3, பாரத் 2 பிளஸ் விரைவில்

முதன்முறையாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ஏற்ற 4ஜி வோல்ட்இ ஆதாரவு பெற்ற மூன்று மாடல்களின் விலை மற்றும் வருகை விபரங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here