மைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்பினிட்டி எடிசன், பார்த் 4 தீபாவளி எடிசன் போன்கள் இந்தியாவில் அறிமுகமானது

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. மைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்பினிட்டி எடிசன், பார்த் 4 தீபாவளி எடிசன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன்களின் விலைகள் முறையே 5,899 ரூபாய் மற்றும் 4,249 ரூபாயாகும்.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இணைந்து பல்வேறு ஆப்பர்களை வழங்கி வருகிறது. இதன் படி, வாடிக்கையாளர்கள் 25GB கூடுதல் டேட்டா-களை பெறலாம். இதை பெற 198 மற்றும் 299 ரூபாய் பிரிப்பெய்டு பிளான்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இருந்தபோதும் அதிகபட்சமாக 5GB வரை ஆப்பர் பெறலாம். இந்த ஆப்பர்கள் மைக்ரோமேக்ஸ் கோ டிவைஸ் மற்றும் மைக்ரோமேக்ஸ் பாரத் 5 போன்களுக்கு கிடைக்கும்.

மைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்பினிட்டி எடிசன், பார்த் 4 தீபாவளி எடிசன் போன்கள் இந்தியாவில் அறிமுகமானது

பாரத் 5 இன்பினிட்டி எடிசன் ஸ்மார்ட்போன்கள் 18:9 முழு வியூ டிஸ்பிளே மற்றும் 5000mAh பேட்டரி கொண்டதாக இருக்கும். இந்த ஸ்மார்ட் போன்கள் 5 மெகா பிக்சல் ரியர் கேமரா மற்றும் 5 மெகா பிக்சல் முன்புற கேமராக்கள் கொண்டிருக்கும். ஆண்டிராய்டு ஓரியோ ஆபரேடிங் சிஸ்டமில் இயங்கும் இந்த போன்கள் 1GB ரேம் மற்றும் 16GB இண்டர்னேல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். இதை 32GB வரை விரிவுபடுத்தி கொள்ள முடியும். மேலும் இதில் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் கொண்டதாக இருக்கும்.

மைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்பினிட்டி எடிசன், பார்த் 4 தீபாவளி எடிசன் போன்கள் இந்தியாவில் அறிமுகமானது

பார்த் 4 தீபாவளி எடிசன் போன்கள், 5 இன்ச் டிஸ்பிளே மற்றும் 2000mAh பேட்டரி கொண்டதாக இருக்கும். இந்த ஸ்மார்ட் போன்கள் 5 மெகா பிக்சல் ரியர் கேமரா மற்றும் 5 மெகா பிக்சல் முன்புற கேமராக்கள் கொண்டிருக்கும். ஆண்டிராய்டு ஓரியோ ஆபரேடிங் சிஸ்டமில் இயங்கும் இந்த போன்கள் 1GB ரேம் மற்றும் 8GB இண்டர்னேல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். இதை 32GB வரை விரிவுபடுத்தி கொள்ள முடியும். மேலும் இதில் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் கொண்டதாக இருக்கும்.