ரூ.7999-க்கு 5000mAh பேட்டரி கொண்ட மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ விற்பனைக்கு வந்ததுஇந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், மிக சவாலான விலையில் பல்வேறு வசதிகளுடன் 5000mAh பேட்டரி கொண்டு இயங்குகின்ற மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ மொபைல் போன் ரூ.7,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ

ரூ.7999-க்கு 5000mAh பேட்டரி கொண்ட மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ விற்பனைக்கு வந்தது

சமீபத்தில் வெளியான சியோமி ரெட்மி 5 மொபைலை விட கூடுதலான வசதிகள் மற்றும் அம்சங்களை பெற்றதாக வெளியிடப்பட்டுள்ள மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ மொபைல் போன் மாடலை பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை பின்பற்றி செயல்படுகின்ற பாரத் 5 ப்ரோ மொபைல் போன்  5.2 அங்குல HD திரையை பெற்று 720×1280 pixels தீர்மானத்தை கொண்டு 1.3GHz குவாட்-கோர் பிராசெஸருடன் கூடிய 3ஜிபி ரேம் கொண்டதாக 32ஜிபி உள்ளீட்டு சேமிப்பை பெற்றதாக கிடைக்க உள்ளது.

உயர்தரமான படங்கள் மற்றும் வீடியோவை பதிவு செய்யும் வகையில் எல்இடி ஃபிளாஷ் பெற்று 13 மெகாபிக்சல் சென்சாரை பெற்றிருப்பதுடன் , முன்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் கொண்டு 5 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

32ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டு விளங்குகின்ற மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ போனில் 128ஜிபி மைக்ரோஎஸ்டி அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் விருப்பங்களாக 4G VoLTE, Wi-Fi, USB OTG ஆகிநவற்றை பெற்று இந்த மொபைலில் வழங்கப்பட்டுள்ள உயர்தர 5000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

2 நாட்கள் முழுமையான பயன்பாட்டுக்கு வழங்கவல்ல இந்த பேட்டரி மற்றும் மூன்று வாரம் வரை ஸ்டேன்ட் பை டைம் கொண்டதாக கிடைக்கின்றது.

ரூ.7999-க்கு 5000mAh பேட்டரி கொண்ட மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ விற்பனைக்கு வந்தது

சீனாவின் சியோமி ரெட்மி 5 போட்டியை எதிர்கொள்ள இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் மிக கடுமையான சவாலை வழங்கும் வகையிலான போட்டியை எதிர்கொள்ள உள்ளது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ விலை ரூ.7,999