மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனத்தின் பாரத் 1, பாரத் 2, பாரத் 3, பாரத் 4 ஆகிய மொபைல்களின் வெற்றியை தொடர்ந்து மைக்ரோமேக்ஸ் பாரத் 5 மொபைல் டிசம்பர் 1, 2017 டெல்லியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 5

ரூ.7000 விலைக்குள் இரட்டை கேமரா பெற்ற மொபைல் போன் மாடலாக விற்பனைக்கு எதிர்பார்கப்படுகின்ற மைக்ரோமேக்ஸ் பாரத் 5 மிகவும் சவாலான விலையில் பல்வேறு விதமான வசதிகளை கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

எவ்விதமான நுட்ப விபரங்களும் வெளியாகத நிலையில்,பாரத் 2 மொபைல் போன் பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய இரட்டை கேமரா முன்புறத்தில் செல்பி படங்களை எதிர்கொள்ள திறன் மிக்க கேமரா ஆகியவற்றுடன் மிக சிறப்பான செயல்திறனை பெற்ற 4ஜி வோல்ட்இ ஆதரவு கொண்டதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்தில் வெளியான மைக்ரோமேக்ஸ் பாரத் 4 போனில் 5 அங்குல ஹெச்டி திரையுடன் 1ஜிபிரேம் கொண்டு இயக்கப்பட மீடியாடெக் MT6737 சிப்செட் கொண்டதாகவும், கேமரா பிரிவில் முன் மற்றும் பின்புறத்தில் 5 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டிருந்தது. ஆண்ட்ராய்டு 7.0 கொண்டு இயங்குகின்ற பாரத் 4 போனில் 2,500mAh திறன் பெற்ற பேட்டரியுடன் ரூ.4999 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here