ரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது

இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், புதிய ஆண்ட்ராய்டு கோ எடிசன் அடிப்படையிலான குறைந்த விலை கொண்ட மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் மாடலை ரூ. 4,399 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ஏர்டெல் நிறுவனத்துடன் ரூ.2000 வரை கேஷ்பேக் சலுகையை வழங்குகின்றது.

மைக்ரோமேக்ஸ் பாரத் கோ

குறைந்த விலையில் மிக சிறப்பான வசதிகளுடன் விரைவாக இயங்கும் வகையிலான ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு கோ பதிப்பில் வெளியாகியுள்ள பாரத் கோ மொபைல் போன் விலை ரூ. 4,399 என நிரணயம் செய்யப்பட்டிருந்தாலும்.

ஏர்டெல் டெலிகாம் நிறுவனத்தின் சிறப்பு ஸ்மார்ட்போன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 2000 வரை கேஷ்பேக் வழங்கப்படுவதனால், பாரத் கோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 2,399 ஆக குறைந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கேஷ்பேக் சலுகை அதிகபட்சமாக 36 மாதங்களில் திரும்ப பெறலாம் என குறிப்பிடப்பட்ப்பட்டுள்ளது.

4.5 அங்குல காட்சி திரை பெற்றுள்ள மைக்ரோமேக்ஸ் பாரத் கோ மொபைல் போன் 480×854 பிக்சல் தீர்மானத்தை பெற்று மீடியாடெக் MT6737 குவாட் கோர் பெற்று 1ஜிபி ரேம் கொண்டு இயக்கப்பட்டு 8 ஜிபி ரேம் உள்ளீட்டு சேமிப்புடன், கூடுதலாக சேமிப்பை விரிவாக்க மைக்ரோ எஸ்டி அட்டையை 32ஜிபி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

2,000mAh திறன் பெற்ற பேட்டரி கொண்ன பாரத் கோ போனில் கேமரா பிரிவில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் சென்சார் மற்றும் முன்புறத்தில் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரட்டை வோல்ட்இ சிம் ஆதரவை பெற்ற இந்த போனில் 1ஜிபி ரேம் பெற்றிருந்தாலும் ஆண்ட்ராய்டு கோ எடிசனில் யூடியூப் கோ, ஜிமெயில் கோ, க்ரோம், அசிஸ்டென்ஸ் கோ, ஜிபோர்ட் கோ போன்றவை ப்ரீ லோட் செய்யப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 4,399