மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிதாக பட்ஜெட் ரக மொபைல் ஒன்றை ரூ.6,999 விலையில் 2ஜிபி ரேம் மற்றும் 8 மெகாபிக்சல் கேமராவுடன் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1 மொபைலை அறிமுகம் செய்துள்ளது.

2ஜிபி ரேம் பெற்ற மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1 விலை ரூ.6,999/-

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1

இந்தியாவை மையமாக கொண்டு செயல்படும் பிரசத்தி பெற்ற மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிதாக மிக சிறப்பான நுட்ப விபரங்களை பெற்ற பட்ஜெட் விலை மாடலை அறிமுகம் செய்துள்ளது.

2ஜிபி ரேம் பெற்ற மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1 விலை ரூ.6,999/-

டிசைன் & டிஸ்பிளே

5 அங்குல IPS எல்சிடி திரையுடன் கூடிய ஹெச்டி தரத்தை பெற்ற 1280 x 720 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக வந்துள்ளது.  294ppi பிக்சல் அடர்த்தி பெற்ற மொபைல் மிகவும் ஸ்டைலிசான அம்சத்துடன் விளங்குகின்றது. 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பினை மேற்புறத்தில் பெற்ற கேன்வாஸ் 1 ஸ்மார்ட்போனில் மேட் கருப்பு மற்றும் க்ரோம் கருப்பு ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது.

2ஜிபி ரேம் பெற்ற மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1 விலை ரூ.6,999/-

பிராசஸர் & ரேம்

1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் பெற்ற இந்த மொபைலில் மீடியாடெக் MT6737 பிராசஸருடன் கூடிய 2 ஜி.பி ரேம் வழங்கப்பட்டு 16 ஜி.பி வரையிலான உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் கூடுதலாக 64 ஜி.பி வரை நீட்டிக்க இயலும் வகையில் மைக்ரோ எஸ்டி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா துறையில் இரு டோன் பெற்ற எல்இடி ஃபிளாஷ் , ஆட்டோஃபோகஸ்,  f/2.2 போன்றவற்றுடன் கூடிய மிக தெளிவான படங்களை வெளிப்படுத்தும் 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ளும் வகையில் குறைந்த வெளிச்சம் உள்ள இடத்திலும் தெளிவாக படங்களை பெற 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில் செயல்படுகின்ற மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1 மொபைலில் 2,500mAh திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றது.

மற்றவை

வைபை, புளூடுத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், 4G LTE ஆதரவு போன்றவற்றை கொண்டதாகவும் உள்ளது. மேலும் ஒரு வருட ஹார்டுவேர் வாரண்டி கொண்டதாக வந்துள்ளது.

விலை

ரூ. 6,999 விலையில் கிடைக்க உள்ள மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1 மொபைல் சியோமி மற்றும் மோட்டோ மொபைல்களுக்கு சவாலாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here