மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது4,000mAh பேட்டரி கொண்டு ஐபோன் X உந்துதலை நேரடியாகவே பெற்றுள்ள மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 ஸ்மார்ட்போன் ₹8999 விலையில் இந்தியாவில் உள்ள முன்னணி ரீடெயிலர்கள் வாயிலாக விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2

இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் , சீன மொபைல் தயாரிப்பாளர்களின் அசுர வளர்ச்சியால் சந்தையில் மிகப் பெரிய இழப்பை சந்தித்துள்ள நிலையில் , தற்போது மீண்டும் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை பல்வேறு நவீன வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

5.7 இன்ச் ஹெச்டி பிளஸ் திரையை பெற்று 720 x 1280 பிக்சல் தீர்மானத்தை பெற்று 18:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்ட இந்த போன் தட்டையான வடிவமைப்பினை பெற்று மிகவும் ஸ்டைலிஷாக ஐபோன் X போன்று செங்குத்தான 13 மெகாபிக்சல் பின்புற கேமரா அமைப்பை பெற்று செல்பி படங்களை பெற 8 மெகாபிக்ஸல் சென்சாரை கொண்டு 1.3 ஜிஹா ஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டு இயக்கப்படுகின்ற 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் 128 ஜிபி வரை எஸ்டி அட்டை வாயிலாக விரிவுப்படுத்தலாம்.

பேக் பேனலில் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் ஆகிய அம்சங்களை பெற்றுள்ள மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 போனில் 22 இந்திய மொழி ஆதரவுடன் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை பின்பற்றி அதிகபட்ச நேரம் பேட்டரி ஆயுளை வழங்கும் வகையில் 4,000mAh திறன் பெற்ற பேட்டரியுடன் 4ஜி எல்டிஇ, ப்ளூடுத், வை-ஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட அம்சங்களை பெற்றுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி ரீடெயில்கள் வாயிலாக ரூ.8,999 விலையில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனை செய்யப்பட உள்ளது.