இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சார்பாக இரண்டு புதிய மொபைல்கள் மைக்ரோமேக்ஸ் எவோக் சீரிஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  எவோக் பவர் விலை ரூபாய் 6,999 மற்றும் எவோக் நோட் விலை ரூபாய் 9,499 ஆகும்.

மைக்ரோமேக்ஸ் எவோக் பவர், எவோக் நோட் அறிமுகம்

மைக்ரோமேக்ஸ் எவோக்

  • புதிதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தால் எவோக் வரிசை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • எவோக் வரிசையில் எவோக் பவர் மற்றும் எவோக் நோட் என இரு மாடல்கள் வந்துள்ளது.
  • பிளிப்கார்ட் வழியாக எக்ஸ்குளூசிவாக விற்பனை செய்யப்பட உள்ளது.

மைக்ரோமேக்ஸ் எவோக் பவர்

புதிய எவோக் பவர் ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் முழு HD திரையை பெற்றிருப்பதுடன்,  1.3 GHz குவாட் கோர் மீடியாடெக்  பிராசஸருடன் இணைந்து செயல்படுகின்ற 2GB ரேம் பெற்று விளங்குகின்றது. ஸ்மோர்ட்போனின் உள்ளடங்கிய சேமிப்பாக 16GB வரை வழங்கப்பட்டுள்ள நிலையில்கூடுதல் சேமிப்பை பெற மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக விரிவுப்படுத்தலாம்.

பின்புறத்தில் அமைந்துள்ள பிரைமரி 8MP ஆட்டோஃபோகஸ் கேமரா எல்இடி ஃபிளாஷ் ஆப்ஷனையும் பெற்று விளங்குகின்றது. 5MP கேமரா முன்புறத்தில் அமைந்துள்ளது.

இந்த மொபைலில் 4000mAh  பேட்டரியை பெற்றிருப்பதுடன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா தளத்தில் செயல்படுகின்ற வகையில் வந்துள்ள எவோக் பவர் மொபைலில் கூடுதல் விருப்பங்களாக 4G LTE, VoLTE, ப்ளூடூத், வை-ஃபை, மற்றும் ஜிபிஎஸ்போன்ற வசதிகளும் உள்ளன.

மைக்ரோமேக்ஸ் எவோக் நோட்

புதிய மைக்ரோமேக்ஸ் எவோக் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மற்றொரு மடலான எவோக் நோட் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் முழு HD திரையை பெற்றிருப்பதுடன் 2.5D வளைந்த கிளாஸ் இடம்பெற்றிருப்பதுடன்,  1.3 GHz குவாட் கோர் மீடியாடெக் MT6753 SoC பிராசஸருடன் இணைந்து செயல்படுகின்ற 3GB ரேம் பெற்று விளங்குகின்றது. ஸ்மோர்ட்போனின் உள்ளடங்கிய சேமிப்பாக 32GB வரை வழங்கப்பட்டுள்ள நிலையில்கூடுதல் சேமிப்பை பெற மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக விரிவுப்படுத்தலாம்.

பின்புறத்தில் அமைந்துள்ள பிரைமரி 13MP ஆட்டோஃபோகஸ், 5P லென்ஸ் எல்இடி ஃபிளாஷ் ஆப்ஷனையும் பெற்று விளங்குகின்றது. 5MP கேமரா முன்புறத்தில் அமைந்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் எவோக் நோட் ஸ்மார்ட்போனில் செக்யூர் ஸ்பேஸ் என்ற வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் ஒவ்வொரு ஆப்களுக்கும் கைரேகை சென்சார் அன்லாக வைக்க இயலும்.

மைக்ரோமேக்ஸ் எவோக் பவர், எவோக் நோட் அறிமுகம்

மெட்டல் பாடி கொண்டுள்ள இந்த மொபைலில் 4000mAh  பேட்டரியை பெற்றிருப்பதுடன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா தளத்தில் செயல்படுகின்ற வகையில் வந்துள்ள எவோக் நோட் மொபைலில் கூடுதல் விருப்பங்களாக 4G LTE, VoLTE, ப்ளூடூத், வை-ஃபை, மற்றும் ஜிபிஎஸ்போன்ற வசதிகளும் உள்ளன.

விலை பட்டியல்

  • எவோக் பவர் விலை ரூபாய் 6,999
  • எவோக் நோட் விலை ரூபாய் 9,499

பிளிப்கார்ட் தளத்தில் இந்த மாடல்கள் தற்பொழுது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here