பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி N11 மற்றும் இன்ஃபினிட்டி N12 அறிமுகம்

இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் , ரூ.10,000 விலைக்குள் மிக சிறந்த வசதிகளை வழங்கும் வகையிலான செயற்கை நுண்ணறிவு திறனுடன் பெற்ற கேமரா கொண்ட மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி N11 மற்றும் மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி N12  விபரத்தை தொடர்ந்து காணலாம்.

இன்ஃபினிட்டி N11 & இன்ஃபினிட்டி N12 மொபைல் போனில்  6.19 அங்குல அகலத்துடன் கூடிய எச்.டி த 720×1520 ரெசலியூசன் திரை கொண்டுள்ளது. 18.9:9 ஸ்கிரீன் டூ டிஸ்பிளே ரேசியோவை கொண்டிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவுடன் கூடிய இரட்டை பின்பக்க கேமராக்களைக் கொண்டிருக்கிற இந்த மொபைல் போனில் 12 மெகாபிக்சல் + மெகாபிக்சல் திறன் கொண்ட இந்த கேமராக்களில் இரண்டாவது கேமரா வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்டதாகும். வீடியோ அழைப்பு மற்றும்  செல்பி ஆகியவற்றுக்கு 8 மெகாபிக்சல் கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது மீடியாடெக் ஹெலியோவின் P22 பிராஸசர் கொண்டு இரண்டு போன்களிலும் இன்ஃபினிட்டி N11 மாடலில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளீட்டு சேமிப்பை பெற்றதாகவும், இன்ஃபினிட்டி N12 மாடலில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளீட்டு சேமிப்பை பெற்றதாக விளங்குகின்றது.

பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி N11 மற்றும் இன்ஃபினிட்டி N12 அறிமுகம்

4000 mAh திறன் கொண்ட பேட்டரி 30 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் என தெரிவித்துள்ள மைக்ரோமேக்ஸ் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக கைரேகை சென்சார், முகத்தை உணர்ந்து திறக்கும் பாதுகாப்பு அமைப்பு, 4ஜி வோல்டிஇ உள்ளிட்ட வசதிகள் பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தில் வெளியிடப்பட்டாலும் அடுத்த 45 நாட்களில் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை வழங்க உள்ளதாக மைக்ரோமேக்ஸ் தெரிவித்திருப்பதுடன், ஜியோ நிறுவனத்துடன் இணைந்து 50 GB கூடுதல் டேட்டா மற்றும் ரூ. 2200 வரை கேஷ்பேக் சலுகையை வழங்குகின்றது.

வருகின்ற 26ந் தேதி முதல் அனைத்து முன்னணி ரீடெயிலர்களிடமும் கிடைக்க உள்ள இந்த மொபைல்போன் விலை பின்வருமாறு ;-

Micromax Infinity N12 போன் விலை ரூ. 9,999

Micromax Infinity N11 போன் விலை ரூ. 8,999