மைக்ரோமேக்ஸ் ஐஒன்

நாட்ச் டிஸ்பிளேவுடன் மைக்ரோமேக்ஸ் ஐஒன் (Micromax iOne) பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் 4,999 ரூபாய் விலையில் இந்திய நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

ஸ்பிரெட்டிரம் தற்போது UNISOC என்ற பெயரில் செயற்பட தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலை 4ஜி ஸ்மார்ட்போன் ஐஒன் மாடல் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் ஐஒன் சிறப்புகள்

கடும் சவாலினை சீன நிறுவனங்களுடன் எதிர்கொண்டு வரும் இந்திய நிறுவனங்களில் மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் ஒன்றாகும். இந்நிறுவனம் தற்போது வெளியிட்ட டூயல் 4ஜி எல்டிஇ ஆதரவை கொண்ட 5.45 அங்குல நாட்ச் டிஸ்பிளே 540 x 1132 பிக்சல்ஸ் தீர்மானம் கொண்டு 19:9 ஆஸ்பெக்ட் விகிதம் பெற்ற இந்த போனில் யூனிஎஸ்ஓசி SC9863 சிப்செட் உடன் கூடிய 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் மெமரி கொண்ட மாடலை வெளியிட்டுள்ளது. கூடுதலாக மெமரியை 128 ஜிபி வரை மைக்ரோஎஸ்டி அட்டை வாயிலாக விரிவுப்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு 9 (பை) இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள ஐஒன் போனில் பிரைமரி ஆப்ஷனில் எல்இடி ஃபிளாஷ் பெற்ற 5 மெகாபிக்சல் கேமரா மற்றும் செல்ஃபி, வீடியோ அழைப்புகளுக்கு என 5 மெகாபிக்சல் கேமரா பெற்றுள்ளது.

2200mAh பேட்டரி கொண்ட மைக்ரோமேக்ஸின் ஐஒன் போனில் 4ஜி எல்டிஇ, வை-ஃபை, ப்ளூடூத் 4.2 ஆப்ஷன் மற்றும் யூஎஸ்பி போர்ட் போன்றவை உள்ளது.

Micromax iOne specifications

  • 5.45-inch (540 x 1132 pixels) டிஸ்பிளே 19:9 ஆஸ்பெக்ட் விகிதம்
  • 1.6GHz ஆக்டோ கோர் Unisoc SC9863 பிராசெஸருடன் IMG8322 GPU
  • 2GB RAM, 16GB உள் மெமரி,  128GB வரை microSD ஆதரவு
  • ஆண்ட்ராய்டு 9.0 (Pie)
  • இரு சிம் (nano + nano / microSD)
  • 5MP ரியர் கேமரா எல்இடி ஃபிளாஷ், f/2.2 aperture, Samsung5E8 sensor
  • 5MP முன் கேமரா எல்இடி ஃபிளாஷ், f/2.2 aperture, Samsung5E8 sensor
  • அளவுகள்: 141 x 69 x 9mm, எடை: 120g
  • 4G, வை-ஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.2, GPS + GLONASS, மைக்ரோ யூஎஸ்பி
  • 2200mAh பேட்டரி